தமிழ் சினிமாவில் 80களில் லெஜெண்ட் இயக்குனராக திகழ்ந்தவர்களில் ஒருவர் பாலு மகேந்திரா. முன்னணி நடிகர்களை உயரத்தில் கொண்டு சென்று பார்த்தவர் தான் அவர். மூன்று திருமணங்களை செய்து கொண்டார் பாலு மகேந்திரா. 1963ல் அகிலேஷ்வரி என்பவரை திருமணம் செய்த பாலு மகேந்திரா ஷோபாவிடம் ரகசியமாக உறவில் இருந்தார். இதன்பின் அகிலேஷ்வரி பாலு மகேந்திராவை விவாகரத்து செய்து பிரிந்தார்.
அதன்பின் 1978ல் ஷோபாவை திருமணம் செய்தார். திருமணமான இரண்டு வருடத்தில் ஷோபா தற்கொலை செய்து மறைந்தார். இந்த தற்கொலைக்குப் பின்னணியில் பாலு மகேந்திரா இருந்ததாக அப்போது சில பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகியிருந்தன. இது பற்றி பலரும் பல விதமான கருத்துகளை தெரிவித்துள்ளனர். பாலு மகேந்திராவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்துகளை சொல்லியுள்ளனர்.
ஷோபா தன் வாழ்வில் வந்து வெகுசீக்கிரமே சென்றுவிட்டதைதான் பாலு மகேந்திரா மூன்றாம் பிறை என்ற படமாக எடுத்ததாக அவரேக் கூறியுள்ளார். அந்த படத்தின் ஸ்ரீதேவியின் கதாபாத்திரத்துக்கு விஜி (ஷோபாவின் இயற்பெயர்) என்ற பெயரைதான் வைத்திருந்தார்.
ஷோபா தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து தமிழ் சினிமாவில் பலரும் பலவிதமாக கருத்துகளை தெரிவித்துள்ளனர். ஆனால் எதற்குமே பாலு மகேந்திரா பதில் சொன்னதில்லை. இப்போது இருவருமே இல்லாத சூழலில் அவர்களுக்கிடையிலான உறவு மறைந்த ரகசியமாகவே ஆகிவிட்டது.
இந்நிலையில் ஷோபாவின் நெருங்கிய தோழியாக இருந்த வடிவுக்கரசி ஒரு நேர்காணலில் பேசும்போது “ஷோபா என் நெருக்கமான தோழி, அவர் கே கே நகரில் வசித்தபோது அடிக்கடி சந்திப்போம். ஏணிப்படிகள் படத்தில் நாங்கள் ஒன்றாக நடித்தபோதிலிருந்து பழக்கம். பசி படத்துக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. அப்போது வாழ்த்து சொல்லப் போனேன். பாலுமகேந்திராவை திருமணம் செய்துகொண்டார் என்பது அப்போதுதான் தெரியவந்தது. எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் ஒருமுறை பாலுமகேந்திரா ஷோபாவுக்கு ‘என் அன்பு மகளே” என்று எழுதி ஒரு பரிசை அளித்திருந்தார்” எனக் கூறியுள்ளார்.
