CINEMA
அண்ணனின் கடிதத்தை பார்த்த ஆனந்தி.. சதித்திட்டம் தீட்டும் சுயம்பு.. பரபரப்பான திருப்பங்களுடன் இன்றைய சிங்கப்பெண்ணே புரோமோ..!!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்க்க மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சன் டிவியில் சிங்க பெண்ணே சீரியல் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலை தனுஷ் கிருஷ்ணா இயக்குகிறார். தினமும் விறுவிறுப்பான கதைக்களத்தோடு சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தற்போது செவரக்கோட்டையில் நடைபெறும் திருவிழாவிற்காக அன்பு, ஆனந்தி, மகேஷ், மித்ரா உள்ளிட்டோர் வந்தனர். ஆனந்தி ஊருக்கு வந்த உடனே சுயம்புலிங்கம் அவரை வம்புக்கு இழுத்தார். திருவிழா ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து ஆனந்திக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றனர். கயிறு இழுக்கும் போட்டியில் சுயம்புலிங்கம் வம்புக்கு இழுத்ததால் அன்பும் மகேஷும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுகின்றனர்.
மித்ரா செவரகோட்டைக்கு வந்ததிலிருந்து சுயம்புலிங்கத்துடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டுகிறார். அன்பு எப்படியாவது தான் அழகன் என ஆனந்தியிடம் சொல்ல வேண்டும் என நினைக்கிறார். மறுபுறம் மகேஷ் ஆனந்தியின் அப்பாவிடம் சென்று பெண் கேட்க நினைக்கிறார். இதற்கிடையே கயிறு இழுத்ததால் மகேஷ் கையில் காயம் ஏற்பட்டது. அதனை கவனித்த வார்டன் மகேஷ் கையில் மருந்து போட்டு விடுகிறார்.
இருவருக்கும் இடையேயான காட்சிகள் அற்புதமாக இருந்தது. இன்றைய எபிசோடு ப்ரோமோ வெளியானது. அதில் ஆனந்தியின் அண்ணன் தனது தங்கைக்கு கடிதம் எழுதியுள்ளார். மறைமுகமாக இருந்து தனது குடும்பத்திற்கு உதவ வேண்டும் என நினைக்கிறார். ஆனந்தி தீ மிதிக்க கூடாது என சுயம்புலிங்கம் மித்ரா இணைந்து சதித்திட்டம் தீட்டுகின்றனர் அவர்களது திட்டத்திலிருந்து தப்பித்து ஆனந்தி தனது வேண்டுதலை நல்லபடியாக முடிக்கிறாரா என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர்.