வடிவேலு ஹீரோவாக நடிக்க வேண்டிய படம் ; விஜய் நடித்து சூப்பர்ஹிட் ஆனது… என்ன படம் தெரியுமா ?

By Deepika on மார்ச் 20, 2024

Spread the love

தனது ஆரம்ப காலங்களில் காதல் பின்னணி கொண்ட ஃபீல் குட் திரைப்படங்களில் தான் அதிகம் நடித்து வந்தார் விஜய். பூவே உனக்காக, காதலுக்கு மாரியாதை போன்ற படங்கள் வரிசையில், அவருக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தது துள்ளாத மனமும் துள்ளும். சில்வர் ஜூப்ளி கொண்டாடிய இந்தப் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது வடிவேலு தான் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.

Vijay in thulladha manamum thullum

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் நடிகர் விஜய்க்கு மிக முக்கியமான இடம் உண்டு. நாளைய தீர்ப்பு திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் விஜய், ஆரம்ப காலங்களில் தனது அப்பாவின் இயக்கத்தில் நடித்து வந்தவருக்கு பூவே உனக்காக திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. தொடர்ந்து வெளியான லவ் டுடே, நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய் போன்ற படங்கள் அவரை சில்வர் ஜூப்ளி ஹீரோ என்ற அடையாளத்தைக் கொடுத்தது.

   
   

Vijay and simran in thulladha manamum thullum

 

இந்த வரிசையில் 1999ம் ஆண்டு வெளியான துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் விஜய்க்கு மேலும் ஒரு ப்ளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. முக்கியமாக கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் உருவானது இந்தப் படத்தில் தான். எழில் இயக்கிய இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். மேலும், மணிவண்ணன், தாமு உள்ளிட்ட பலரும் நடிக்க, எஸ்.ஏ ராஜ்குமார் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் எனலாம்.

Vadivelu

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி செளத்ரி தயாரித்த துள்ளாத மனமும் துள்ளும் 200 நாட்கள் வரை வெற்றிகரமாக ஒடியது. மேலும், விஜய்யின் மார்க்கெட்டும் வேற லெவலில் பிக் அப் ஆனது. முன்னதாக இந்தப் படத்தில் வடிவேலு தான் ஹீரோவாக நடிக்கவிருந்தாராம்.

Vadivelu was the first choice for thulladha manamum thullum

இதுகுறித்து துள்ளாத மனமும் துள்ளும் ஸ்டோரி போர்ட் தயாரித்த இயக்குனர் சந்தோஷ் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார், அவர் கூறியுள்ளதாவது, நான் தான் துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் ஆர்ட் வரைந்தேன். அப்போது அந்த படத்திற்கு ருக்மணிக்காக என பெயரிட்டிருந்தோம். முதலில் வடிவேலு மற்றும் ஊர்வசி தான் இந்தப்படத்தில் நடிக்க இருந்தனர். ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போனது.

Vijay and simran in thulladha manamum thullum

பின்னர் விஜயகாந்த், முரளி என அடுத்தடுத்து எழில் கத்தி சொன்னார். சூப்பர் குட் பிலிம்ஸ் உள்ளே வந்தபிறகு தான் விஜய் நடிப்பது உறுதியானது. விஜய்க்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்த படம் துள்ளாத மனமும் துள்ளும் தான் என்பதில் சந்தேகமில்லை என கூறியுள்ளார் இயக்குனர் சந்தோஷ்