காமெடி உலகில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருந்தவர் வடிவேலு. இவர் தன்னை தாழ்த்திக் கொண்டு அவர் செய்த காமெடிகள் ரசிகர்களை ஈர்த்தது. இதன் காரணமாக அவர் நடிக்காத படங்களை இல்லை என்ற நிலைமை தமிழ் சினிமாவில் உருவானது. இப்படி இருக்க அவருக்கும் மறைந்த விஜயகாந்த்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் விஜயகாந்தை பழிதீர்க்க திமுக பேச்சாளராக சென்றார் வடிவேலு. இதன் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் வடிவேலுவை திரையில் பார்க்கவே முடியவில்லை. இதனை அடுத்து அவருக்கு இதுபோன்ற சில பஞ்சாயத்துக்கள் அனைத்தும் முடித்து வைக்கப்பட்டதன் காரணமாக மீண்டும் நாய் சேகர் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்து நடித்தார். அடுத்து மாரி செல்வராஜின் மாமன்னன் படத்தில் நடித்தார். இந்த படம் மெகா ஹிட் ஆனது.
தற்போது அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார் . இப்படியான நிலையில் வடிவேலு கடந்த 2023 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து நடித்த வெற்றியான திரைப்படம் தான் மாமன்னன். இந்த திரைப்படத்தில் வடிவேலு ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது மட்டுமல்லாமல் இப்படத்தில் “மலையில தான் தீ பிடிக்குது ராசா” என்ற ஒரு பாடலையும் வடிவேலும் பாடியிருந்தார். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வடிவேலு இந்த பாடல் பாடிய விதம் குறித்து பிரபலம் ஒருவர் பகிர்ந்து உள்ளார்.
அதில், மாமன்னன் படத்தில் இந்தப் பாட்டு எழுதப்படும்போது வடிவேலு சார் தான் இந்த பாட்டை பாட வேண்டும் என்று மாறி செல்வராஜ், ஏ ஆர் ரகுமான் மற்றும் உதயநிதி அனைவரும் தெரிவித்து விட்டனர். இப்படி ஒரு பாடலை பாட வேண்டும் வாங்க என்று அழைத்ததும் வடிவேலு வர மறுத்துவிட்டார். முதலில் லிரிக்ஸ் அனுப்புங்க என்று கூறினார். அதைப் பார்த்ததும் போன் போட்டு இந்த பாடல் என்னால் பாட முடியாது என்று கூறிவிட்டார். பிறகு அவரை நேரில் அழைத்து பாட சொன்னபோது சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவருக்கு வேர்த்துக் கொண்டிருக்கிறது. அவரால் இந்த பாடலை பாடவே முடியவில்லை.
இது ரொம்ப கஷ்டமா இருக்கு என்னால பாட முடியாது என்று கூறிவிட்டு வடிவேலு அமர்ந்து விட்டார். அப்போது அந்த இடத்திற்கு வந்த ஏ ஆர் ரகுமான் வடிவேலுவை அமர வைத்துவிட்டு ஒரு காபி கொண்டு வாங்க என்று கூறினார். பிறகு மைக்கையும் அவருடைய அருகில் வைத்து விட்டு நீங்க பழைய பாட்டு எல்லாம் ரொம்ப நல்லா பாடுவீங்க தானே அதை பாடுங்க என்று சொன்னார். வடிவேலுவும் அதை பாடிக் காட்டினார்.
அதன் பிறகு நாட்டுப்புறப் பாடல்கள் என ஒவ்வொன்றாக வரிசையாக சொல்லி அனைத்திலும் ஒரு நான்கு வரிகளை வடிவேலுவை பாட வைத்தார். இறுதியாக இந்த பாட்டு எல்லாம் நல்லா பாடுறீங்களே அதே மாதிரி தான் இந்த பாட்டும் ஒன்னும் இல்ல அசால்டா பாடுங்கள் என்று கூறினார். வடிவேலு முதல் லைன் பாட ஆரம்பித்ததும், அதே மாதிரி தான் அந்த பாட்டு மாதிரி தான் இதுவும் பாடுங்க என்று ஏ ஆர் ரகுமான் கூறினார். அவர் சொன்னதை எல்லாம் கேட்டுவிட்டு பாடிய வடிவேலு 15 நிமிடத்தில் அந்த பாட்டை அசால்ட் ஆக பாடி முடித்து விட்டார் என்று கூறியுள்ளார்.