தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள நடிகர் தான் ஜீவா. ஆசை ஆசையாய் மற்றும் தித்திக்குதே திரைப்படங்களில் லவ்வர் பாயாக வந்த ஜீவா அமீர் இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ராம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகர் என்று ரசிகர்கள் மத்தியில் பெயர் எடுத்தார். இதனைத் தொடர்ந்து டிஷ்யூம், பொறி என ஒரு பக்கம் கமர்சியல் படங்களில் நடித்தாலும் அப்படியே ஈ மற்றும் கற்றது தமிழ் என நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களிலும் ஜீவா நடித்து வந்தார்.
குறிப்பாக சிவா மனசுல சக்தி திரைப்படத்திற்கு பின்னர் மிகப்பெரிய நடிகராக தமிழ் சினிமாவில் வளம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் தேர்வு செய்த சில படங்கள் அவருக்கு பெரிதாக எதுவும் கை கொடுக்கவில்லை. இதனிடையே ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு அக்டோபர் 11ம் தேதி ரிலீஸ் ஆகிய மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் தான் பிளாக். இந்த திரைப்படத்தை பாலசுப்பிரமணி இயக்கியுள்ளார். இப்படம் ஹோகரன்ஸ் என்ற ஹாலிவுட் படத்தின் அதிகாரபூர்வ தமிழ் ரீமேக் படம் ஆகும். முதல் வாரத்திலேயே இந்த திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் ஜீவா கடந்த 2007 ஆம் ஆண்டு சுப்ரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தனது பத்து வயதில் முதல்முறையாக ஜீவா சுப்ரியாவை சந்தித்துள்ளார். இருவரும் ஒரே பள்ளியில் படித்து வந்த நிலையில் சிறுவயதில் இருந்தே நண்பர்களாக இருந்துள்ளனர். கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் நண்பர்களாக இருந்த நிலையில் இருவருக்கும் நட்பை தாண்டி ஒரு ஈர்ப்பு இருந்துள்ளது. ஜீவா தான் முதன் முதலில் தன்னுடைய காதலை சுப்ரியாவிடம் கூறியுள்ளார். இருவரும் ஏழு ஆண்டுகளாக காதலர்களாக இருந்த நிலையில் இருவரும் தங்கள் துறையில் ஓரளவு முன்னேறிய பிறகு தங்கள் காதலை குடும்பத்தினரிடம் சொல்லி திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளனர்.
இரு வீட்டாரின் சம்மதத்துடன் 2007 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ளார். இப்படியான நிலையில் ஜீவா நடித்த படங்களிலேயே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படங்கள் என்றால் அது சிவா மனசுல சக்தி மற்றும் கோ உள்ளிட்ட படங்கள் தான். அதிலும் குறிப்பாக சிவா மனசுல சக்தி திரைப்படம் கடந்த ஆண்டு மீண்டும் ரீ ரீலீஸ் செய்யப்பட்டு திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஜீவா மற்றும் அனுயா இருவரும் பல வருடங்கள் கழித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாடினர்.
அந்தப் படத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்த அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர். இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் சிவா மனசுல சக்தி. கிட்டத்தட்ட 16 வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் இணைந்து சிவா மனசுல சக்தி படத்தின் நினைவலைகளை பகிர்ந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜீவா, என் மனைவியுடன் ஹனிமூன் சென்று வந்த நிலையில் தான் இந்த படத்தில் அனுயா உடன் நடித்தேன். அப்போது சில கசமுசா காட்சிகள் மற்றும் கிராமர் காட்சிகளை படமாக்கினார்கள். என் மனைவி என்னை பார்த்து முறைக்க ஆரம்பிச்சுட்டாங்க.
நல்ல வேலை என் மனைவியும் அணு யாவும் நல்ல தோழிகளாக மாறிய நிலையில் எந்த பஞ்சாயத்தும் ஏற்படாமல் தப்பித்து விட்டேன். சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் முதல் காட்சியை எங்கள் இருவருக்கும் பாரில் நடந்த அந்த காட்சி தான். முதல்முறையாக ஒரு பெண் பாருக்கு வருவதை அன்று தான் நானும் பார்த்தேன். உண்மையிலேயே அந்த காட்சியை ஒரு பாரில் வைத்து தான் படமாக்கப்பட்டது.
அது முதலில் எங்களுக்கு ஒரு டெஸ்ட் மாதிரி தான் கொடுத்தாங்க. இந்த காட்சியை நன்றாக பண்ணிவிட்டால் படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லலாம் என்று கூறினான் அந்த படத்தின் ஷூட்டிங் எடுத்தாங்க. அடுத்தது சந்தானம் கூட பண்ற காமெடி எல்லாமே முடிஞ்ச அளவுக்கு நாங்க தனியா பண்ணது தான். கேமராவை ஓட விட்டுட்டு எங்களுக்கு என்ன தோணுதோ அதை பேசிட்டு இருந்தோம். சில வார்த்தைகள் ஸ்கிரிப்டில் இருக்குதா இல்லையா என்று கூட எங்களுக்கு தெரியவில்லை என்று சிவா மனசுல சக்தி படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை ஜீவா பகிர்ந்து உள்ளார்.