ஒரு வழியா முடிவுக்கு வந்த கிசுகிசு வாழ்க்கை… பிக்பாஸ் பிரபலம் அமீர் – பாவனி ஜோடிக்கு திருமண தேதி குறிச்சாச்சு..!

By Nanthini on மாசி 20, 2025

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னதம்பி சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை பாவனி ரெட்டி. சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் போதே சில காரணங்களால் அந்த சீரியலில் இருந்து இவர் விலகி விட்டார். கொஞ்சிக் கொஞ்சி தமிழ் பேசும் அழகான இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தது. அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு தனி ஒரு ரசிகர்கள் கூட்டம் உருவானது. அந்த நிகழ்ச்சியில் ஆசை ஆசையாக திருமணம் செய்து கொண்டேன் ஆனால் திடீரென்று ஒரு நாள் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், இது நாள் வரை அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது எனக்கு தெரியாது, பிறந்ததிலிருந்து நான் அதிர்ஷ்டம் இல்லாதவள் என்று தண்ணீர் மல்க பேசி இருந்தார்.

இப்போ பாவனி என்னோட இருக்குறதுக்கு காரணமே இவங்க தான்... மனம் திறந்த அமீர்!

   

இவருடைய இந்த பேச்சு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கலங்க வைத்தது. இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வைல்டு கார்டு போட்டியாளராக வந்த அமீர் பாவணியை காதலிப்பதாக கூறினார். ஆனால் நான் உன்னை விட பெரியவள் என அவர் காதலை ஏற்காமல் இருந்தார். இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர் மற்றும் பாவணி இருவரும் கலந்த கொண்ட போது அந்த நிகழ்ச்சியில் பாவணி அமீரின் காதலை ஏற்றுக் கொண்டார். தற்போது இருவரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்களின் லிவ்விங் ரிலேஷன்ஷிப் சர்ச்சையாக பேசப்பட்டாலும் அதைப் பற்றி எல்லாம் இவர்கள் இருவரும் கவலைப்படாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

   

அட்ராசக்க.. திருமணம் நடக்கும் முன்பே குட் நியூஸ் சொன்ன அமீர் - பாவனி..!  குவியும் வாழ்த்துகள்..!! - Tamil Spark

 

இதனைத் தொடர்ந்து காதலர் தினத்தை முன்னிட்டு சமீபத்தில் நடிகை பாவணி ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமீருடன் கைகோர்த்தபடி இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு Comming soon என்று பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் திருமண தேதியா இல்லை புது படமா என்று கேட்டு வந்தனர். இப்படியான நிலையில் தங்களுடைய திருமண தேதியை அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதில், பாவனி இந்த மூன்று வருடம் எப்படி போனது என்று தெரியவில்லை. நமக்கு பிடித்தவர்களுடன் இருந்தால் மூன்று வருடம் கூட மூன்று நிமிடம் போல தான் இருக்கும் என்று ஒரு கவிதையையும் எழுதி திருமண தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி இவர்களுடைய திருமணம் சென்னை ஈசிஆரிலுள்ள ஒரு விழாவில் நடைபெற உள்ளது.

பிக்பாஸ் பிரபலங்களான அமீர் - பாவனிக்கு விரைவில் திருமணமா ? வைரலாகும்  இன்ஸ்டாகிராம் பதிவு! - Touring Talkies

தங்கள் திருமணத்தை எளிமையாக நடத்த இவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஹால்தி விழா ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் என்றும் ஏப்ரல் 20ம் தேதி காலை இருவருக்கும் திருமணம் முடிந்து அதே நாள் மாலை திருமண வரவேற்பு விழா நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் ஏப்ரல் 21ஆம் தேதி பார்ட்டி நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர். இதில் அமீர் முஸ்லிம் என்பதாலும் பாவனி இந்து என்பதாலும் மத வேறுபாடு பார்க்காமல் இவர்களுடைய திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் எளிமையாக நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அமீர் மற்றும் பாவணி ஜோடிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.