தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான ராயன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தனுஷ் தற்போது இட்லி கடை திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக பலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ் தற்போது முழுக்க முழுக்க பொது முகங்களை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இளசுகளின் காதல், ரொமான்ஸ் மற்றும் பிரேக்கப் ஆகியவற்றை வைத்து ஒரு ஜாலியான கதையை தனுஷ் எடுத்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. பல திறமைகளைக் கொண்ட தனுஷ் பவர் பாண்டி திரைப்படத்தை இயக்கிய அனைவரின் கவனத்தை ஈர்த்த நிலையில் ராயன் திரைப்படத்தை இயக்கிய ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்தார். தற்போது தனுஷ் தன்னுடைய சகோதரி மகனையும் அனிகா சுரேந்திரன் மற்றும் பிரியா வாரியர் ஆகியோரை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
![]()
இப்படியான நிலையில் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தனுஷின் மேனேஜர் பெயரில் ஒரு மோசடி அரங்கேறியுள்ளது. அதாவது தனுஷின் மேனேஜர் என்று கூறி ஒரு நம்பரில் இருந்து பெண்கள் பலருக்கும் மெசேஜ் மற்றும் போன் செய்யப்பட்டுள்ளது. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் எடுக்க உள்ளோம் அதற்கு புதுமுக நடிகைகள் சிலர் துணை கதாபாத்திரங்களில் நடிகர் தேவைப்படுகின்றனர் என்று கூறி பெண்களை மோசடியில் ஈடுபடுத்தி உள்ளனர். சில பெண்கள் சரி என்று ஒப்புக்கொண்டு மேற்படி பேச ஹோட்டலுக்கு வர சொல்லி உள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் என்ன என்ற விசாரிக்க ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் ஸ்ரேயாஸ் காதுக்கு நேரடியாக செல்ல அவர் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில், எனது பெயரிலோ அல்லது வொண்டர் பார் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரிலோ எந்த ஒரு நடிகர் நடிகைகள் தேர்வும் நடைபெறவில்லை. அப்படி நடந்து வருவதாக வரும் செய்திகள் அனைத்தும் முற்றிலும் போலியானவை மற்றும் ஆதாரமற்றவை என்று குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒரு நம்பரை குறிப்பிட்டு இந்த நம்பர் என்னுடைய நம்பர் இல்லை என்றும் என் புகைப்படத்தை வைத்து தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்தச் செய்தி தற்போது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
