ஜிவி பிரகாஷ் – சைந்தவி பிரிவுக்கு என்னை எல்லோரும் டார்கெட் பண்றாங்க… மனம் திறந்த பேச்சுலர் பட நடிகை திவ்யபாரதி…!
ஜிவி பிரகாஷ் – சைந்தவி பிரிவுக்கு என்னை எல்லோரும் டார்கெட் பண்றாங்க… மனம் திறந்த பேச்சுலர் பட நடிகை திவ்யபாரதி…!
By Nanthini on மாசி 19, 2025
Spread the love
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் தான் ஜிவி பிரகாஷ். இவர் வெயில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் இளம் வயதிலேயே இசையமைப்பாளராக அறிமுகமானார். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே வேற லெவல் ஆல்பத்தை கொடுத்திருந்த இவர் அதன் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளராகவும் தற்போது மிக சிறந்த நடிகராகவும் உருவாகி இருக்கின்றார். மேலும் ஜிவி பிரகாஷ் குமார் ஏ ஆர் ரகுமானின் சகோதரியின் மகன்தான்.
சிறுவயதிலேயே ஏ ஆர் ரகுமான் இசையில் சில பாடல்களில் அவரது மழலை குரல் ஒலித்து இருக்கிறது. தற்போது முன்னணி இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.முதலில் இவர் ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தில் ஒரு பாடகராக அறிமுகமாகி அதன் பிறகு வெயில் என்ற திரைப்படத்தில் இசையமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் இசையமைத்துள்ளார். அதன்படி பொல்லாதவன், ஆனந்த தாண்டவம், அங்காடி தெரு, ராஜா ராணி, ஆடுகளம், சூரரைப் போற்று உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள தங்கலான் மற்றும் அமரன் திரைப்படத்திற்கும் இவர் இசையமைத்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படத்திற்கு இவர் இசையமைத்துள்ளார். இப்படியான நிலையில் ஜிவி பிரகாஷ் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும் உள்ளார். இப்படியான நிலையில் கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் திடீரென விவாகரத்தை அறிவித்த நிலையில் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேர அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இப்படியான நிலையில் விவாகரத்திற்கு பிறகும் பல இசை நிகழ்ச்சிகளில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் சேர்ந்து பணியாற்றி வருவது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இப்படியான நிலையில் ஜிவி பிரகாஷ் உடன் பேச்சுலர் திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து நடித்த நடிகை தான் திவ்யபாரதி. அந்தத் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் முத்த காட்சிகளில் நடித்திருப்பார். திருமணத்திற்கு முன்பே முத்த காட்சிகளில் நடிக்க கூடாது என சைந்தவி கண்டிஷன் போட்டிருந்த நிலையில் அதையும் மீறி ஜி வி பிரகாஷ் பேச்சுலர் திரைப்படத்தில் முத்த காட்சிகளில் நடித்திருந்தார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷனலுக்கு கூட ஜிவி பிரகாஷ் திவ்யபாரதியுடன் காரில் ஒன்றாக சென்ற வீடியோக்களும் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் திவ்யபாரதியை கடுமையாக விமர்சித்தனர். இப்படியான நிலையில் திவ்யபாரதி மீண்டும் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து கிங்ஸ்டன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்ற நிலையில் அதில் பேசிய திவ்யபாரதி, ஜிவி பிரகாஷ் சாரோடு சேர்ந்து நடிப்பதால் தவறாக பேசினார்கள். எனக்கு பிறை தேடும் சாங் ரொம்ப பிடிக்கும்.
ஜிவி பிரகாஷ் சாரும் சைந்தவி மேமும் ஒன்றாக கான்செஸ்ர்ட் பண்றாங்க என்னும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இதுக்கு மேல நம்மளை டார்கெட் பண்ண மாட்டாங்க என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்ப ரொம்ப அதிகமாயிடுச்சு. குறிப்பா பொண்ணுங்க தான் ரொம்ப என்னை டார்கெட் பண்றாங்க. ஏன் இப்படி பண்றீங்க? அவங்க செம்ம ஜோடி தெரியுமா? ஏன் நீங்க போய் இப்படி கெடுத்தீங்க என்றெல்லாம் கமெண்ட் பண்ணுவாங்க. நான் எதுவும் ரிப்ளை எல்லாம் பண்ண மாட்டேன். பார்த்துட்டு அப்படியே விட்டுவிடுவேன் என்று திவ்யபாரதி பேசியிருக்கிறார்.