42 வயசுல இப்படியா?.. கிளாமரை வாரி இறைக்கும் சேரன் பட நடிகை விமலா ராமன்..!

By Nanthini on மாசி 19, 2025

Spread the love

கே. பாலசந்தர் இயக்கிய பொய் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை விமலா ராமன். தொடர்ந்து சேரன் நடிப்பில் வெளியான ராமன் தேடிய சீதை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ள விமலா ராமன் தமிழில் கடைசியாக சுந்தர் சியின் இருட்டு மற்றும் சோனியா அகர்வாலின் கிரான்மா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

   

ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த விமலா ராமன், பரதநாட்டியம் போன்ற பல நடன கலைகளை கற்றவர். கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா ஆஸ்திரேலியா பட்டத்தை வென்றவரும் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

   

 

தமிழ் மற்றும் தெலுங்கு என பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வரும் விமலா ராமன் நடிகர் வினய்யுடன் காதல் வலையில் சிக்கியுள்ளார்.

ஹனுமான் படத்தில் வில்லனாக நடித்த இவர் நடிகை விமலா ராமனை பல ஆண்டுகளாக காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் அடிக்கடி ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதனிடையே விமலா ராமன் தனது 42 வயதை கடந்துவிட்டார் என்ற போதும் அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிடும் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

அதன்படி தற்போது கிளாமர் லுக்கில்  அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.