கூழாங்கல் பட இயக்குனர் பி.எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்த கொட்டுக்காளி திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. கொட்டுக்காளி திரைப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அன்னா பென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெர்லின் உள்ளிட்ட பல நாடுகளில் கொட்டுக்காளி திரைப்படம் திரையிடப்பட்டு பல விருதுகளை வென்றுள்ளது.
இயக்குனர் படத்தில் கதை ஓட்டத்தில் கிடைக்கும் சத்தங்களை வைத்து கொண்டு சென்றுள்ளனர். இயக்குனர் ஆணாதிக்க உலகில் பெண்களின் நிலைப்பாடு, சமூகத்தின் நிலை ஆகியவற்றை உணர்வுபூர்வமாக கூறியிருக்கிறார். சூரி பாண்டி கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
பிரபல இயக்குனரான மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், மாமன்னன், கர்ணன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் முதல் நாளில் வாழை திரைப்படம் 1. 3 கோடி முதல் 1.5 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் கொட்டுக்காளி திரைப்படம் முதல் நாளில் 50 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இனி விடுமுறை நாட்கள் என்பதால் இரு படங்களின் வசூலும் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.