Connect with us

ரோகிணியை பற்றிய உண்மையை கூறும் சீதா… அதிர்ச்சியில் மீனா…

CINEMA

ரோகிணியை பற்றிய உண்மையை கூறும் சீதா… அதிர்ச்சியில் மீனா…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் சமாதானம் ஆகிறார்கள். முத்துக்கு பிடித்ததை சமைத்து கொடுத்து சாப்பிட வைக்கிறாள் மீனா. அதை பார்த்து விஜயா எரிச்சல் அடைகிறாள். இதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது. இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை இனி காண்போம்.

இன்றைய எபிசோடில் மனோஜ் ஆபீசுக்கு கிளம்பும்போது ஹாலில் போட்டு இருந்த முத்துவின் கட்டிலில் அடிபட்டு முத்துவிடம் சண்டை இடுகிறான். கட்டிலை கொண்டு வேறு எங்கேயாவது போடு ஹால்ல போடுறதுக்கு தான் இடமா அப்படின்னு சொல்லி சண்டை போடுகிறான். முத்து நீ பார்த்து நட உன் கண்னு பின்னாடியா இருக்கு என்று சொல்லி செல்கிறான். அடுத்ததாக மீனா தனது தோழிகளை பார்க்க பூக்கடைக்கு செல்கிறாள். அங்கே அவரது தோழிகள் நேத்து என்ன செஞ்ச அண்ணனுக்கு பிடிச்சதை சமைச்சு கொடுத்தியா என்று கேட்கிறார்கள்.

   

   

அதற்கு மீனா ஆமக்கா நான் சமைச்சேன். ஆனா நான் சமைச்சதை சாப்பிடுவதற்கு முன்னாடியே அவர் சமாதானம் ஆயிட்டாரு நான் பண்ணது தப்புதான் புரிஞ்சிகிட்டாரு என்று சொல்கிறாள். அதற்கு அவரது தோழிகள் மீனா நீ கொடுத்து வச்சவ அண்ணனே சமாதானம் ஆகி உன்கிட்ட பேசிட்டாங்க என்று சொல்கிறார்கள். அதற்குள் ஹாஸ்பிடலில் இருந்து சீதா போன் செய்கிறார். உடனே ஹாஸ்பிடலுக்கு கிளம்பி வா அக்கா ஒரு அஞ்சு முழம் ப எடுத்துட்டுவா என்று சொல்லி சொல்கிறாள். உடனே பூவை எடுத்துக்கிட்டு மீனா ஹாஸ்பிடலுக்கு செல்கிறாள். அங்கு சீதா அக்கா வா அக்கா எங்க ஹாஸ்பிடல் கேஷியர் பின்னாடி இருக்க படத்துல டெய்லி பூ போடுறதுக்கு கேக்குறாங்க உங்க வீட்ல பூக்கடை வச்சிருக்கீங்களே நீங்க கொடுங்கன்னு சொன்னாங்க. நான் அதான் உன் பேரு சொன்ன அம்மாவால கொடுக்க முடியாது நீ வண்டியில வந்து கொடுத்துட்டு போயிடுவல்ல அப்படின்னு சொல்கிறாள்.

 

மீனா ஆச்சரியப்பட்டு பரவால்ல சீதா நீ கூட பிசினஸ் புடிச்சு தர அளவுக்கு வளர்ந்துட்டே அப்படின்னு சொல்கிறாள். அது மட்டும் இல்லாம சீதா அக்கா நான் தான் வேலைக்கு வந்துட்டேன்ல நம்ம வீட்டு செலவுகளை நானே பார்த்துக்கொள்கிறேன். நீ வீட்டுக்கு காசு கொடுக்க வேண்டாம் நீயே ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்க நானே பார்த்துக்கொள்கிறேன் அப்படின்னு சொல்கிறாள். அதைக்கேட்டு கண் கலங்குகிறாள் மீனா. நீ எவ்வளவு பெரிய ஆளா வளர்ந்துட்டே சீதானு சொல்கிறாள். அப்போது அந்த ஹாஸ்பிடலுக்கு ரோகிணி வருகிறாள் வந்து செக்கப் பண்ணனும் அப்படின்னு சொல்லிட்டு வெயிட் பண்ணுகிறாள்.

அங்கு ரோகினி வந்ததை பார்த்த மீனாவும் சீதாவும் இவங்க எதுக்கு இங்க வந்திருக்காங்க நான் வேணா போய் கேட்கட்டுமா அப்படின்னு சீதா சொல்கிறாள்.அவங்க ஏதும் கன்சிவ் ஆயி இருப்பாங்களோ அப்படின்னு சீதா சொல்றான். இல்ல சீதா நீ சும்மா இரு நம்ம எதுவும் கேட்க வேண்டாம் வைக்க வேண்டாம் போனதடவை இப்படித்தான் நான் நினைச்சு போய் வீட்ல சொல்லி பெரிய பிரச்சினையாச்சு. இந்த வாட்டி நான் எதுவுமே தலையிட மாட்டேன் அப்படின்னு சொல்ற .அப்புறம் ரோகிணி டாக்டர் ரூமுக்குள்ள போன பிறகு சீதா போய் நான் விசாரிக்குறேன்னு போகிறாள்.

சீதா அங்கு வரவேற்பாளர் இடம் வந்து அவங்க எதுக்கு வந்திருக்காங்க என்று கேட்கிறாள் அதற்கு வரவேற்பாளர் நீ எதுக்கு அவங்கள பத்தி கேட்கிறே அப்படின்னு கேட்கிறார். அவங்க என் மாமாவோட அண்ணா ஒய்ஃப் தான் அதனால தான் கேட்கிறேன் அப்படின்னு சொல்கிறாள். உடனே அந்த வரவேற்ப்பாளரும் அவங்க இரண்டாவது வாட்டி கன்சீவ் ஆகுறதுக்காக கன்சல்டிங் வந்திருக்காங்க அப்படின்னு சொல்றாங்க. அதை கேட்டு அதிர்ச்சி அடைஞ்ச சீதா நேரா போய் மீனா விடம் இந்த விஷயத்தை கூறுகிறாள். மீனா அதைக் கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்து போகிறாள்.

மீனாவுக்கு என்ன செய்றதுன்னு தெரியல. உடனே சீதா கிட்ட இந்த விஷயத்தை நீ யார்கிட்டயும் சொல்லாத. இதை பத்தி நம்ம பேச வேண்டாம் கேட்க வேண்டாம் யார்கிட்டயும் சொல்ல வேண்டாம் என்று சொல்லிட்டு அங்க இருந்து அதிர்ச்சியிலே வீட்டுக்கு கிளம்புகிறாள் மீனா. வீட்டுக்கு வந்து யோசனை பண்ணிக்கிட்டே இருக்கிறாள். விஜயா திட்டுகிறாள் நீ ஏன் இப்படி வீட்டை போட்டுட்டு போயிட்ட வீட்ல யாரு வேலையை பார்க்கிறது சொல்லி திட்டுகிறாள். ஆனாலும் மீனா அதிர்ச்சியில் இருந்து வெளிவராமல் சிந்தனை செய்து கொண்டே இருக்கிறாள். எப்படி இது சாத்தியமாகும் இரண்டாவது குழந்தை எப்படின்னு அதிர்ச்சியில் இருக்கிறார் மீனா. இதற்கிடையில் அங்கு வந்த மனோஜூம் ரோகிணியும் இனிப்பு வாங்கிட்டு வந்து விஜயாவுக்கு கொடுக்கிறாள். என்ன குட் நியூஸ் ரோகினி எதுவும் உண்டாயிருகாலா என்று கேட்கிறார். அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா இன்னைக்கு நம்ம கடையில நிறைய சேல்ஸ் ஆயிருக்கு இன்னைக்கு தான் அதிகமா சேல்ஸ் ஆயிருக்கு அதான் இனிப்பு வாங்கிட்டு வந்தேன்னு சொல்கிறான். உடனே விஜயா இதெல்லாம் ஒரு குட் நியூஸா நீங்க குழந்தை பெத்துக்கணும் அது தான் குட் நியூஸ் என்று சொல்கிறாள். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.

More in CINEMA

To Top