தனம் தானியம் குறையாமல் இருக்க வேண்டுமா…? சமையலறையில் கட்டாயம் இதை கடைபிடிங்க…

By admin on ஆவணி 24, 2024

Spread the love

தனம் என்றால் செல்வம் பணத்தை குறிப்பது. தானியம் என்றால் சமைக்கக்கூடிய சாப்பிடக்கூடிய அனைத்து பொருட்களையும் குறிப்பது ஆகும். அதனால்தான் ஒருவரை வாழ்த்தும்போது தனம் தானியம் பெருக வேண்டும் என்றும் கூட வாழ்த்துவார்கள். இந்த இரண்டும் ஒருவருக்கு வாழ்வில் அமைந்தால் அதைவிட பெரிய வரம் என்ன இருக்க முடியும். அப்படி நம் வீட்டில் தனம் தானியம் குறைவில்லாமல் இருக்க நம் வீட்டு சமையல் அறையில் ஒரு சிலவற்றை கடைபிடிக்க வேண்டும். அவை என்ன என்பதை இனி காண்போம்.

   

உணவிற்கு அதிபதியானவள் அன்னபூரணி தாயார். நம் வீட்டு சமையல் அறையில் ஒரு சிறிய படம் அல்லது சிலையாக அன்னபூரணி தாயாரை கிழக்கு முகமாக வைத்து வழிபடலாம். முடிந்தால் தினமும் விளக்கேற்றி சாம்பிராணி தூபம் காட்டலாம். அன்னபூரணி சிலையாக இருந்தால் அன்னபூரணி சிலைக்கு ஏற்ப ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் மஞ்சள் சேர்த்த அட்சதை அரிசியை நிரப்பி அதில் சில்லறை ஒரு காசை வைத்து அதற்கு மேல் அன்னபூரணி தாயாரை உட்கார வைக்க வேண்டும்.

   

நம் வீட்டு சமையல் அறையில் தினமும் சாப்பிட்டு முடித்த பின்பு சாதத்தை முற்றிலுமாக காலிசெய்து கழுவி கவிழ்த்து விடக்கூடாது. ஒரு சிறிய கின்னத்தில் ஒரு பிடி அளவு சாதம் எடுத்து தனியாக வைத்து விட வேண்டும். இரவு நேரத்தில் அந்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி அன்னபூரணி தாயார் முன்பு மூடி வைத்துவிட வேண்டும். இது நம் வீட்டில் தனம் தானியம் சேர்வதற்கு வழிவகுக்கும்.

 

அதுமட்டுமில்லாமல் நம் வீட்டு கிட்சன் சிங்கில் கழுவாத பாத்திரங்களை இரவு போட்டு வைக்க கூடாது. இரவு அனைத்து பாத்திரங்களையும் கழுவி சுத்தமாக வைத்துவிட்டு அடுப்பையும் சுத்தமாக துடைத்து விட்டு சமையலறையில் பயன்படுத்தும் கரித்துணியையும் ஒரு அலசு அலசி விட்டு காய வைத்து விட வேண்டும். ஏனென்றால் நம் முன்னோர்களும் தெய்வங்களும் நம் வீட்டு சமையலறையை தினமும் வந்து பார்ப்பார்கள் என்பது ஒரு ஐதீகம்.

இதே போல் கிச்சன் வாஸ்துவும் சரியாக இருக்க வேண்டும். ஒரு வீட்டிற்கு முக்கியமானது சமையலறை மற்றும் பூஜை அறை தான். இவை இரண்டும் சரியான வாஸ்து முறையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அக்னி மூலையில் தான் நெருப்பு பற்ற வைக்க வேண்டும். அந்த மூலையில் தான் சமையலறையும் கட்டி இருக்க வேண்டும்.

இது தவிர அன்னபூரணி தாயாரை மகிழ்விக்க வேண்டும் என்றால் அன்னதானம் செய்ய வேண்டும். நம்மால் முடிந்த அளவுக்கு செய்யலாம் இல்லையேல் ஒரு நபருக்காவது அன்னதானம் செய்வது நமக்கு புண்ணியத்தையும் கடவுளின் ஆசியையும் பெற்று தரும்.