CINEMA
நானும் பாலாவும் இப்ப வர பேசிக்கல.. இயக்குனர் பாலா அழுதது ஏன்..? மாரி செல்வராஜ் அளித்த விளக்கம்..!!
பிரபல இயக்குனரான மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், மாமன்னன், கர்ணன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
முன்னதாக வாழைப்பழத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர்கள் ரஞ்சித், வெற்றிமாறன், சசி, மிஸ்கின், அருள் மாதேஸ்வரன், பாலா உள்ளிட்டோர் மாரி செல்வராஜை பாராட்டினர். மேலும் பிரபல இயக்குனரான பாலா, வாழை படத்தை பார்த்துவிட்டு எமோஷனல் ஆகிவிட்டார்.
அவர் படத்தை பார்த்துவிட்டு வந்த உடனே மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வாழ்த்தினார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த நிலையில் மாரி செல்வராஜ் அளித்த பேட்டியில் இயக்குனர் பாலா அல்லது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த மாதிரி செல்வராஜ் ஒண்ணுமே இல்ல. அவரு கிஸ் பண்ணது நெட்ல வந்துருச்சு. அவரும் அந்த உணர்ச்சியை சொல்ல முடியாம போனாரு. நானும் அத சொல்ல முடியாமல் போனேன்.
அது ஒரு பயங்கரமான உணர்ச்சி. ரெண்டு பேரும் பேசிக்கவே இல்ல. இப்ப வரைக்கும் பேசிக்கவே இல்ல. அந்த வீடியோவில் நீங்க என்ன பாத்தீங்களோ, அது மட்டும் நடந்துச்சு. அது என்ன மாதிரியான ஃபீல், அது என்ன மாதிரியான எமோஷன் அப்படிங்கறது நீங்க தான் புரிஞ்சுக்கணும். நானும் ஒரு வார்த்தை பேசல. அவரும் ஒரு வார்த்தை பேசல. பேசுற சூழல் அங்க இல்ல என ஓபன் ஆக கூறியுள்ளார்.