Categories: சினிமா

பா விஜய் பாடலில் சந்தேகம் கேட்ட கலைஞர்… ஒரே வார்த்தையில் சர்ச்சைப் பஞ்சாயத்தை முடித்த வாலி!

Spread the love

தமிழ் சினிமாவின் கதை சொல்லல் முறையில் முத்திரை பதித்த திரைப்படங்களில் ஒன்று ஆட்டோகிராஃப். அதுவரை இயக்குனராக அறியப்பட்ட இயக்குனர் சேரன் அந்த படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார். அவரோடு அந்த படத்தில் மல்லிகா, கோபிகா, சினேகா மற்றும் கனிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

தனது திருமணத்துக்கு அழைப்பிதழ் வைக்க செல்லும் சேரன், அவர் வாழ்வில் கடந்து வந்த நபர்களை சந்திப்பதே இந்த படத்தின் கதை. அதில் மையக் கதபாத்திரத்தின் பள்ளிப் பருவ காதல் மற்றும் கல்லூரி கால காதல் என கடக்கும் கதை, அதில் தோல்வியடையும் அந்த மனிதன் எப்படி தன்னுடைய வீழ்ச்சிகளில் இருந்து மீள்கிறான் என்பதே கதை.

இதை மிகவும் கவித்துவமாகவும் நாஸ்டாஜிக் அனுபவத்தோடும் உருவாக்கி இருந்தார் சேரன். அதனால் பெருவாரியான ஆண்களால் இந்த கதையோடு தொடர்புகொள்ள முடிந்தது. இதனால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது பா விஜய் எழுதிய ஒவ்வொரு பூக்களுமே பாடல். வாழ்க்கையில் தோற்று அடுத்து என்ன என்று தெரியாமல் இக்கட்டான நிலையில் இருக்கும் ஒரு மனிதனை மீண்டெழச் செய்யும் வரிகள் கொண்ட பாடலாக அந்த பாடலை பா விஜய் எழுதியிருப்பார்.

#image_title

அந்த பாடலுக்காக பா விஜய் சிறந்த பாடல் ஆசிரியருக்கான தேசிய விருதையும் பெற்றார். ஆனாலும் அந்த பாடல் குறித்து ஒரு சர்ச்சை உருவானது. அது என்னவென்றால் அந்த பாடலில் ஒரு இலக்கணப் பிழை உள்ளது என்பதுதான். ஒவ்வொரு பூக்களுமே என்று பன்மையில் வரக் கூடாது, ஒவ்வொரு பூவுமே என்று ஒருமையில்தான் வரவேண்டும் என சில விமர்சனங்கள் எழுந்தன.

இது குறித்து முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பா விஜய் முன்னிலையில் கவிஞர் வாலியிடம் கேட்டுள்ளார். அதற்கு வாலி ” அதற்கு வாலி அய்யா ஆயிரம் நிலாக்களே வாருங்கள் என வராமல்  ”ஆயிரம் நிலவே வா” என்று வருமென்றால் “ஒவ்வொரு பூக்களுமே” என்றும் வரலாம் என்றார். அதில் ஒன்றும் தப்பில்லை” என்று சொல்லிவிட்டாராம்.

vinoth

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

7 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

7 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

7 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

7 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

7 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

7 மணத்தியாலங்கள் ago