Categories: சினிமா

பாட்ஷா இல்ல… படையப்பா இல்ல… ரஜினியின் அந்த சூப்பர்ஹிட் படத்தை ரீமேக் செய்து நடிக்க ஆசைப்பட்ட விஜய்…!

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய். தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதற்கேற்றார் போல அவரின் சுமாரான படங்கள் கூட நல்ல வசூலைப் பெற்று வருகின்றன.

தற்போது மாஸ் நடிகராக இருக்கும் விஜய், 90 களில் தனக்கான இடத்துக்காக போராடிக் கொண்டிருந்தார். இடையிடையே ஹிட் கொடுத்திருந்தாலும் அவருக்கென்று ஒரு நிலையான மார்க்கெட் கில்லி படத்துக்கு முன்பே உருவானது. அதனால் அதற்கு முந்தைய படங்களில் எல்லாம் தன்னுடைய படத்தில் துறைசார்ந்த பிரபலங்கள் இருக்க வேண்டும், அது படத்தின் பிஸ்னஸுக்கு உதவும் என விரும்புவார்.

#image_title

தன்னுடைய ஆதர்ஸமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நினைத்துக் கொண்டுதான் சினிமாவுக்கு வந்தார் விஜய். இப்போது அவரின் மார்க்கெட் ரஜினியை விட அதிகமாகியுள்ளது. மேலும் ரஜினி இழந்த அரசியல் வாய்ப்பையும் விஜய் வெற்றிகரமாகப் பிடித்துள்ளார். சமீபத்தில் கட்சியை ஆரம்பித்து 2026 ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் விஜய் பற்றி காமெடி நடிகர் சதீஷ் கூறியுள்ள கருத்து இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அதில் “நான் ஒருமுறை விஜய் சாரிடம், ரஜினி சாரின் எந்த படத்தை ரீமேக் பண்ணி நடிக்கலாம் என ஆசைப்படுகிறீர்கள் எனக் கேட்டேன். அவர் பாட்ஷா படத்தை சொல்வார் என நினைத்தேன். அவர் அண்ணாமலை என்றார். ஒரு சாதாரண மனுஷன், அம்மா, தங்கச்சியோடு எப்படி ஜெயிக்கிறான்னு அண்ணாமலை இருக்கும். அதனால எனக்கு அது கரெக்டா இருக்கும் என்றார்.” எனக் கூறியுள்ளார்.

விஜய் நடிக்க ஆசைப்பட்ட போது அவரின் தந்தை எஸ் ஏ சி அதற்கு உடனடியாக சம்மதம் சொல்லாமல் தயங்கியுள்ளார். அப்போது அண்ணாமலை ரிலீஸாகி இருந்த நேரம். அந்த படத்தின் இடைவேளையின் போது ரஜினி, சரத்பாபுவிடம் சவால் விடும் காட்சியை விஜய் நடித்துக் காட்டிய பின்னர்தான் எஸ் ஏ சி க்கு நம்பிக்கை வந்து அவரை ஹீரோவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

vinoth

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

9 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

9 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

9 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

9 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

9 மணத்தியாலங்கள் ago