நம்ம கூடவே இருக்கும் விஷம்… “ரூ.10 பேனாவில் மறைந்திருக்கும் கொடூர நச்சு…” டிஜிட்டல் இந்தியா… தீராத ஒரே பிளாஸ்டிக் பிரச்சனை… வருங்காலமே அழியும் நிலை… ஆய்வில் வெளியான உண்மை…!

By Visaka on ஆடி 24, 2026

Spread the love

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 450 கோடி பிளாஸ்டிக் பேனாக்கள் பயன்படுத்தப்பட்டு குப்பையில் வீசப்படுகின்றன. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 1.80 லட்சம் டன் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகி, நிலத்திலும் நீர்நிலைகளிலும் தேங்குகின்றன. நாட்டின் 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான எழுதுபொருள் சந்தையில், 70 சதவீத பங்கை இந்த மலிவு விலை பால் பாயிண்ட் பேனாக்களே ஆக்கிரமித்துள்ளன. குறிப்பாகப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் இவற்றின் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது.

மண்ணில் எறியப்படும் இந்த பேனாக்களிலிருந்து வெளியேறும் காட்மியம் போன்ற நச்சு உலோகங்கள், நிலத்தின் வேதியியல் தன்மையை மாற்றி விவசாயத்தைப் பாதிக்கின்றன. மேலும், நிலத்தடி நீரிலும் உணவுச் சங்கிலியிலும் இந்த நச்சுகள் கலப்பதால், மனிதர்களுக்குப் பல கடுமையான நீண்டகால ஆரோக்கியச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. டிஜிட்டல் யுகத்திலும், மலிவு விலை காரணமாகப் பிளாஸ்டிக் பேனாக்களின் கழிவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பது தீவிரமான சுற்றுச்சூழல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

   

இப்பிரச்சனைக்குத் தீர்வாக, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ‘ரீபென் இந்தியா’ போன்ற அமைப்புகள் கழிவுப் பேனாக்களைச் சேகரித்து மறுசுழற்சி செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. அதேவேளையில், பொதுமக்களும் மூங்கில், காகிதம் மற்றும் மரத்தால் செய்யப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த பேனாக்களுக்கு மாற வேண்டும். நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பேனாவையும் மறுசுழற்சிக்கு அனுப்புவதும், சூழல் நட்புப் பொருட்களைத் தேர்ந்தெடுப்பதும் மட்டுமே நம் நிலத்தையும் நீரையும் எதிர்காலச் சந்ததிக்காகப் பாதுகாக்கும்.