ஓடுங்க ஒடுங்க… “ஆடி ஆஃபர்னா இதுதான்யா…” போன் வாங்குனா தங்கமா?… கோவை மக்களுக்கு அதிரடி ஜாக்பாட்… ‘தி சென்னை மொபைல்ஸ்’யின் மாஸ் பிளான்…!

By Visaka on ஆடி 24, 2026

Spread the love

‘தி சென்னை மொபைல்ஸ்’ நிறுவனம் தமிழகம் முழுவதும் உள்ள தனது கிளைகளில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அசத்தலான புதிய சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புப் பரிசாக 1 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இருப்பினும், இது வெறும் சாதாரண தள்ளுபடி திட்டம் மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் ஒரு முயற்சியாகும். அதன்படி, கடைகளில் ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் சொந்தமாக ஒரு கவிதை எழுதி சமர்ப்பிக்க வேண்டும். அவற்றில் சிறந்த கவிதைகளாகத் தேர்ந்தெடுக்கப்படும் சுமார் ஆயிரம் பேருக்கு இந்த தங்க நாணயம் பரிசாக வழங்கப்படவுள்ளது.

ஆடி மாதச் சலுகையின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் முதற்கட்டப் பரிசு வழங்கும் விழா கோவையில் உள்ள தனியார் மாலில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் தி சென்னை மொபைல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சம்சு அலி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, முதற்கட்டமாகத் தேர்வான நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக 1 கிராம் தங்க நாணயங்களை வழங்கிப் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், வாடிக்கையாளர்களுக்குத் தரமான ஸ்மார்ட்போன்களைச் சிறந்த விலையில் வழங்குவதோடு அவர்களின் திறமையைக் கௌரவிப்பதே இதன் முக்கிய நோக்கம் என்றும், அடுத்தகட்டமாகத் தமிழகத்தின் முக்கிய மெகா நகரங்களிலும் இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுத் தேர்வாளர்களுக்குத் தங்க நாணயங்கள் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.