அமைதி ததும்பும் அழகான முகம் கொண்ட நடிகையாக அழகிய கண்ணே என்று நினைவலைகளை எழுப்பும் உதிரிப்பூக்கள் நடிகை அஸ்வினியை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. 1977 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஹேமாவதி என்ற திரைப்படம் மூலமாக திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவரை இயக்குனர் மகேந்திரன் தான் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். 1979 ஆம் ஆண்டு மகேந்திரன் இயக்கத்தில் விஜயன், சரத்பாபு மற்றும் மதுமாலினி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான உதிரிப்பூக்கள் திரைப்படம் மூலமாக தான் அஸ்வினி தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு ஒரு நல்ல படமாக அமைந்து பாராட்டு கலை குவித்தது.

தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்த நிலையில் ஒரு கட்டத்தில் இருந்து சினிமாவில் ஒதுங்கினார். தற்போது அவர் தன்னுடைய ஈசி ஈசி மேக்ஸ் என்ற youtube சேனல் மூலமாக மாணவர்களுக்கு கணிதம் கற்றுக் கொடுத்து வருகின்றார். பெங்களூரில் வசித்து வரும் இவரின் மகளுக்கு திருமணம் ஆகி பேரக்குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றார். இப்படியான நிலையில் அஸ்வினி சமீபத்தில் அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். அதில், உதிரிப்பூக்கள் படம் பண்ணும் போது எனக்கு 25 வயது தான் இருந்தது.

அந்தப் படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பது எனது வயதுக்கு மீறிய ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் சினிமா என்பதற்காக அதில் நடித்தேன். அது மட்டுமல்லாமல் மகேந்திரன் சார் எனக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்தார். மேட்டுப்பாளையத்தில் சூட்டிங் நடைபெறும் போது இரண்டு ஏசி ரூம் மட்டும்தான் இருந்தது. அதில் ஒன்றரை சரத் பாபு சாருக்கு கொடுத்துட்டு மற்றொரு ஏசி ரூமை பாம்பேவில் இருந்து வந்த மதுமாலினிக்கு கூட கொடுக்காமல் அந்த ஏசி ரூமை எனக்கு கொடுத்தார். அந்த அளவிற்கு மகேந்திரன் சார் என்னை மரியாதையுடன் நடத்தினார். உதிரிப்பூக்கள் திரைப்படம் வெளியான சமயத்தில் படத்துல பார்த்துவிட்டு எல்லோரும் என்னை அழு மூஞ்சி என்றுதான் சொன்னார்கள்.

ஆனால் உண்மையிலேயே நான் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பேன். என்னுடைய உடல் ஆரோக்கியத்திற்காக எப்போதும் நான் ஏதாவது செய்து கொண்டிருப்பேன். அக்குபஞ்சர் சிகிச்சை கூட செய்து கொண்டிருக்கின்றேன். உதிரிப்பூக்கள் படத்தில் நடிக்கும் போது நான் முதலில் பயந்து பயந்து தான் நடித்தேன். எனக்கு அப்போ சுத்தமா தமிழ் வரல. இந்தியில் எழுதி வைத்து தான் டயலாக் எல்லாம் மனப்பாடம் செய்து ஓரளவுக்கு பண்ணினேன். மகேந்திரன் சார் பயப்படாம பண்ணு என்ற என்கிட்ட நிறைய டைம் சொன்னாரு. அந்தப் படத்துல நடிக்கும் போது பேபி அஞ்சு தான் எனக்கு குரு. அவளுக்கு அப்போ ஒரு மூணு நாலு வயசு தான் இருக்கும்.

ஒரு நாள் அவ என்கிட்ட இந்தியில் பேசிக் கொண்டிருந்தா. அவங்க பாட்டி தான் டெய்லி அவளை கூட்டிட்டு வருவாங்க. படத்துல அவ பேசுறது எல்லாமே கியூட் ரியாக்ஷனா இருக்கும். ஆனா அந்தப் படத்துக்கு அப்புறம் 46 வருஷம் ஆச்சு இன்னும் அவளை நான் பார்க்கவே இல்லை. சென்னைக்கு வந்த சமயத்துல கூட அவ கூட பேச வேண்டும் என்று நான் நிறைய முயற்சி பண்ண. போன் பண்ணப்ப கூட அவங்க அம்மா எடுத்து அங்க போய் இருக்கா இங்க போயிருக்கா என்று ஏதோ சொல்லிட்டு இருந்தாங்க. இன்னைக்கு வரைக்கும் அவளை நான் பார்க்கவே இல்ல என்று உதிரிப்பூக்கள் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அஸ்வினி பகிர்ந்து கொண்டு உள்ளார்.
