இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் 1989-ஆம் ஆண்டு ரிலீசான புதிய பாதை திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு சுகமான சுமைகள், சரிகமபதநி, புள்ளை குட்டிக்காரன், ஹவுஸ் ஃபுல், இவன், பச்சை குதிரை, கதை திரைக்கதை வசனம் இயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்பவும், ஒத்த செருப்பு உள்ளிட்ட படங்களை இயக்கி நடித்துள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். அதன் பிறகு சீதா, ரமேஷ் என்ற சீரியல் நடிகரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் பார்த்திபன் திருமணம் செய்து கொள்ளாமல் தனது இரண்டு பெண் பிள்ளைகளுக்காக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். சினிமாவிலும் நடிப்பு இயக்கம் என பிசியாக உள்ளார்.
இந்நிலையில் பார்த்திபன் சமீபத்தில் அளித்த பேட்டியில் சிவாஜியுடன் இணைந்து நடித்த தாவணி கனவுகள் படத்தின் சுவாரசிய சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். அதில், நான் முதன் முதலாக நடித்த படம் தான் தாவணி கனவுகள். அந்தத் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதை விட ஒரு துணை இயக்குனராக இயக்குனரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமாக இருந்தது. பாக்கியராஜ் சார் கிட்ட அசிஸ்டென்டா சேரும்போது என்னுடைய அப்பா மோசமான நிலைமையில் இருந்தார். அவர் இறப்பதற்கு முன்பு தன் பையன் சினிமாவில் சாதித்து விடுவான் என்ற நம்பிக்கையை அவருக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.
தாவணி கனவுகள் திரைப்படத்தில் எனக்கு போஸ்ட்மேன் வேடம் தான் கிடைத்தது. என்னுடைய அப்பாவின் வாழ்க்கையும் போஸ்ட்மேன் ஆகத்தான் தொடங்கியது. விதி திரைப்படத்தில் பாக்கியராஜ் சார் போஸ்ட்மேன் வேடம் போட்டபோது அணிந்திருந்த அந்த காக்கி சட்டையை தேடிப் பிடித்துக் கொண்டு வந்து ரெடி பண்ணி வச்சுட்டேன். ஆனா பாக்கியராஜ் சார் இன்னொருத்தர போஸ்ட்மேன் மேடம் போட ரெடி பண்ணிட்டு இருந்தாரு. பிறகு கடைசியா அந்த கேரக்டர் என்கிட்ட வந்துச்சு. ரெடியா இருந்த நான் உடனே நடிக்கிறதுக்கு தயாராகி போய் நின்னுட்டேன்.
சிவாஜி சார் என்ன தனியா கூட்டிட்டு போய் இங்க பாரு தம்பி உன்னோட டைரக்டர் தான் இந்த படத்துக்கு ப்ரொடியூஸ் பண்றாரு அவரோட மானத்தை காப்பாத்துற மாதிரி நடந்துக்கோ. இந்த காட்சியில் உன்னோட டயலாக் ரொம்ப பெருசா இருக்கும். நீ நல்லா நடிக்கவில்லை என்றால் நான் ரத்த வாந்தி எடுக்கும் காட்சிக்காக அணிந்திருந்த இந்த டிரஸ் எல்லாம் வேஸ்ட் ஆகி திரும்பவும் நாம் மூன்று மணி நேரம் கோபிசெட்டிபாளையம் பயணித்து டிரஸ் போட்டுட்டு வரணும். உன்னோட டைரக்டருக்கு துரோகம் பண்ணிராத என்று கூப்பிட்டு மிரட்டுற மாதிரி பேசினாரு.
பிறகு பாக்யராஜ் சார் கூப்பிட்டு நல்லா பண்ணீரு என்று சொல்லி அனுப்புனாரு. என்னோட மனசுல கேன்சரால் பாதிக்கப்பட்ட எங்கப்பா இறப்பதற்குள் என்னை போஸ்ட்மேன் வேடத்தில் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அந்த காட்சியில் நடித்தேன். அவ்வளவு பெரிய டயலாக் பேசி ஒரே டேக்கில் ஓகே ஆயிருச்சு. அதன் பிறகு சிவாஜி சார் என்ன கூப்பிட்டு நாடகம் அனுபவமா என்ற என்கிட்ட கேட்டாரு. ஆமா என்று சொன்னதும் அவரே என்ன பாராட்டினாரு என்று பார்த்திபன் பேசி உள்ளார்.