அமெரிக்காவுடன் இறுதி அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ளத் தவறினால், ஈரான் மீது மீண்டும் போர் தொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி திட்டம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நீடித்து வரும் சூழலில், ட்ரம்பின் இந்த மிரட்டல் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது . அமெரிக்காவின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு இறுதி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் ராணுவத் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
இத்துடன், ஒருவேளை போர் தவிர்க்கப்பட்டால், மத்திய கிழக்கு நாடுகளுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால், அதற்குப் பிரதிபலனாக அந்த நாடுகளின் ஒட்டுமொத்த வருவாயில் 20 சதவீதத்தை அமெரிக்காவுக்குப் பங்காக வழங்க வேண்டும் என்ற புதிய திட்டமும் பரிசீலனையில் இருப்பதாகப் பேச்சுகள் எழுந்துள்ளன . பாதுகாப்பு வளையத்தை உருவாக்குவதற்கு ஈடாகப் பெருந்தொகையைக் கோரும் ட்ரம்பின் இந்த அதிரடித் திட்டம் உலக நாடுகளிடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தங்க நகைகள் வாங்குவதற்காக பல ஆண்டுகளாகச் சேமித்த சுமார் 12…
ஹைதராபாத் பசவதாரகம் நகரைச் சேர்ந்த 24 வயது ஆசிரியை ஒருவர், தனது கணவர் மீது பிலிம்நகர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பான…
தெலங்கானா மாநிலம் சங்கா ரெட்டியில், காதலனுக்காகப் பெற்றோரைக் கொன்ற வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த சுரேகா என்ற இளம் செவிலியர்…
இந்தக் காணொளி மனிதநேயமும் அன்பும் தோற்றத்தைக் கடந்தது என்பதை மிகவும் அழகாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் உணர்த்துகிறது. சாலையில் திரியும் ஒருவரைச் சமூகம்…
உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் திருமணமான ஒரு பெண், தனது கணவர் மற்றும் காதலன் ஆகிய இருவருடனும் ஒரே…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள சமூக சுகாதார மையத்தில், நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் அபூர்வமான குழந்தை…