ஐயோ… பாரசீக வளைகுடாவில் அடுத்த அதிரடி… ‘புகையுமில்லை, தீயுமில்லை’… ஈரானின் கார்க் தீவு அருகே அமெரிக்கா மீண்டும் தாக்குதலா?… பரபரக்கும் பின்னணி…!

By Swetha on புரட்டாதி 6, 2026

Spread the love

ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறி நான்கு நாள்கள் கூட முடியாத நிலையில், ஈரானின் முக்கிய எரிசக்தி மையமான கார்க் தீவுக்கு அருகே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் முக்கிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி முனையமாகத் திகழும் கார்க் தீவுப் பகுதியை இலக்கு வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஈரானின் Fars செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள கார்க் தீவுக்குச் பத்தில் சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கார்க் தீவில் உள்ள நிருபர் வழங்கிய தகவலின்படி, இந்த வெடிப்புச் சத்தங்கள் கடல் பகுதியிலிருந்தே எழுந்ததாகத் தோன்றினாலும், அப்பகுதியில் தீப்பற்றியதற்கான அல்லது புகை மூட்டம் எழுந்ததற்கான எந்தவொரு அறிகுறியும் உடனடியாகத் தென்படவில்லை.

   

தற்போது வரை இந்த வெடிப்புச் சம்பவங்களுக்கான துல்லியமான காரணம் என்னவென்றோ அல்லது அவை எங்குிருந்து, யாரால் நடத்தப்பட்டன என்பதற்கான அதிகாரப்பூர்வத் தகவல்களோ வெளியாகவில்லை. பதற்றம் நிறைந்த பாரசீக வளைகுடாப் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர்ச் சம்பவம் குறித்து கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.