“அடுத்து பெரிய சம்பவம் இருக்கு”…. கொளத்தூர் தேர்தல் வழக்கின் கிளைமேக்ஸ்…. HC தீர்ப்புக்குப் பின் ஸ்டாலின் போட்ட மாஸ் பிளான்….!

By Nanthini on புரட்டாதி 6, 2026

Spread the love

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கக்கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான பணிகளை திமுக தலைமை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுகவுள்ளதாக திமுக வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், கட்சியின் சட்டக்குழு விரைந்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தேர்தலில் பதிவான வாக்குகளைச் சரிபார்க்கும் விவிபாட் இயந்திரங்களில் கண்டறியப்பட்ட குறைபாடுகள், விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் மற்றும் சட்ட ரீதியான முரண்பாடுகள் குறித்து மு.க.ஸ்டாலினிடம் நேரில் விளக்கி, மேல்முறையீட்டு மனுவை தகுந்த ஆதாரங்களுடன் தாக்கல் செய்ய திமுகவின் சட்டப்பிரிவு தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளது.