பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் இருக்கும் லஷ்கர் அமைப்பின் ஒரு அங்கமான the resistance front (TRF) என்ற அமைப்பை பயங்கரவாத இயக்கமாக அமெரிக்க அரசு அறிவித்தது. அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா வரவேற்பு அளித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி அன்று பகல்ஹாம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் பரிதாபமாக கொல்லப்பட்டார்கள் .
அதாவது பைசரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தார்கள். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இதற்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்துர் மூலமாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறி வைத்து தாக்கி அழித்தது. இதற்கு பாகிஸ்தானும் பதிலடி கொடுத்து வந்த நிலையில் கிட்டத்தட்ட இந்தியா பாகிஸ்தான் இடையே மூன்று நாட்கள் போர் நடந்த பிறகு பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவுக்கு வந்தது.
