தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். கோலிவுட்டில் அறிமுகமாகி அவர் நடித்த முதல் சில படங்கள் கமர்சியல் ரீதியாக அமைந்தது. அதில் டூயட்டுக்கு மட்டுமே அவர் பயன்படுத்தப்பட்டார். இதனை தொடர்ந்து தன்னுடைய ரூட்டை மாற்றிய கீர்த்தி சுரேஷ் நடிகை திலகம் என கொண்டாடப்படும் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றில் சாவித்திரியாக நடித்த ஒட்டுமொத்த ரசிகர்களின் பாராட்டையும் பெற்றார். தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து நல்ல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமைந்த நிலையில் சாவித்திரி வாழ்க்கை வரலாற்றில் நடித்ததற்காக தேசிய விருதும் கிடைத்தது.
தொடர்ந்து மாமன்னன், சைரன் என சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் பேபி ஜான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படியான நிலையில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய நீண்ட காலர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய கீர்த்தி சுரேஷ், “நான் அப்செட் ஆகிவிட்டால் நன்றாக சாப்பிடுவேன் .அதேபோல் காரை எடுத்துக்கொண்டு தனியாக ட்ரைவ் செய்வேன். அப்போது நல்ல இசையை கேட்பேன். அதுமட்டுமில்லாமல் வீட்டில் ஒரு நாய் குட்டி வளர்கிறேன். அப்செட் என்ன வந்தாலும் அவன் முகத்தை பார்த்தால் அனைத்தும் காணாமல் போய்விடும்” என்று கூறியுள்ளார்.
