சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகல், அவரது மகன் சைதன்யா பாகல் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். துர்க் மாவட்டம் பிலாய் நகரில் உள்ள அவருடைய வீட்டில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. மதுபானக் கொள்கை முறைகேடு புகாரில் பூபேஷ் பாகல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே அவருடைய வீட்டில் இரண்டு முறை அமலாக்கத்துறை சோதனையானது நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
