மேற்கு வங்காள மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள சூரி நகரில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவியாக இருந்த ஹசின் ஜஹானும், அர்ஷி ஜஹானும் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட நிலத்தகாரரில் அடிதடி சண்டையில் ஈடுபட்டுள்ளார்கள் .இந்த சண்டை குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சை கிளப்பி உள்ளது. அதாவது ஹசின் ஜஹான் தன்னுடைய மகள் அர்ஷி ஜஹான் பெயரில் உள்ளதாக கூறப்படும் நிலத்தில் கட்டிடம் கட்ட முடிவெடுத்துள்ளார். இதற்கு பக்கத்து வீட்டுப் பெண் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு வீட்டார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
An attempt to murder FIR under BNS sections 126(2), 115(2), 117(2), 109, 351(3) and 3(5) has lodged against Hasin Jahan, the estranged wife of Mohammed Shami and Arshi Jahan, her daughter from her first marriage by her neighbour Dalia Khatun in Suri town of Birbhum district in… pic.twitter.com/2dnqXUKMdK
— NCMIndia Council For Men Affairs (@NCMIndiaa) July 16, 2025
இந்த வாக்குவாதம் தள்ளுமுள்ளாக மாறியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது தொடர்பாக ஹசின் ஜஹான் மற்றும் அவரது மகள் கொலை முயற்சி, திட்டமிட்டு தாக்குதல், ஆகியவற்றின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஹசின் ஜஹான் மீது இதற்கு முன்பு பல்வேறு சட்டப்பூர்வ பிரச்சனைகள் இருந்துள்ளது. முகம்மது ஷமியோடு நீண்ட நாட்களாக அவருக்கு குடும்பத்த தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சமீபத்தில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் அவருடைய மகள் மற்றும் ஹசின் ஜஹானுக்கு 4 லட்சம் மாத பராமரிப்பு தொகை வழங்க உத்தரவு பிறப்பித்திருந்த்தது குறிப்பிடத்தக்கது.
