பிரபல இளம் ஹீரோவை சூர்யாவுக்கு வில்லனாக களமிறக்கும் கார்த்திக் சுப்புராஜ்.. இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே..!!

By admin on வைகாசி 29, 2024

Spread the love

பிரபல நடிகரான சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் கங்குவா படத்திற்கு ஹாலிவுட் கலைஞர்கள் கிராபிக்ஸ் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

   

நிகழ்காலம் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் படம் நடக்கிறது. அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு சூர்யா 44 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.

   

 

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து தங்களது 2டி நிறுவனம் சார்பில் தயாரிக்க உள்ளனர். இந்த நிலையில் உறியடி விஜயகுமாரை சூர்யா படத்தின் வில்லனாக படக்குழுவினர் கமிட் செய்துள்ளார்களாம்.

உறியடி விஜயகுமார் தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத் திறமை உடையவர். கடைசியாக உறியடி விஜயகுமார் நடித்த எலெக்ஷன் திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்றது. அந்த படத்தில் அவர் ஹீரோவாக நடித்துள்ளார். மாஸ் ஹீரோவான சூர்யாவுக்கு உறியடி விஜயகுமார் வில்லனாக நடித்தால் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Uriyadi” Movie Hero Actor ' Vijay Kumar's next is a youth action-drama. -  Moviewingz.com