நடிகை நிவிஷா அவளுக்கு என்ன அழகிய முகம் என்ற திரைப்படம் மூலமாக வெள்ளி திரையில் என்ட்ரி கொடுத்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீசான இந்த படம் அவ்வளவாக வரவேற்பை வரவில்லை.
இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் ஆன தெய்வமகள் சீரியல் மூலம் நிவிஷா பிரபலமானார். இதனை அடுத்து ஜீ தமிழ், விஜய் டிவி என பல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்களில் நிவிஷா நடித்துள்ளார்.
அந்த வகையில் முள்ளும் மலரும், ஈரமான ரோஜாவே, யாரடி நீ மோகினி உள்ளிட்ட சூப்பர் ஹிட் சீரியல்களில் நிவிஷா நடித்துள்ளார்.
இந்த நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பான மலர் சீரியலில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தார். அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் ஒரு சில காரணங்களால் சீரியலில் இருந்து விலகிவிட்டார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நிவிஷா அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது மார்டன் உடையில் நிவிஷா பகிர்ந்த புகைப்படங்கள் வேகமாக பரவி வருகிறது.