Categories: சினிமா

தளபதி டுவிஸ்ட்…! அதிர போகும் மலேசியா…. ஜனநாயகன் ஆடியோ லான்ச்சில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்…!

Spread the love

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படம் என்று கூறப்படும் ‘ஜன நாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. எச். வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பிரியாமணி, பாபி தியோல் உட்படப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. படம் வருகிற ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வரத் தயாராக உள்ளது.

இந்தத் திரைப்படத்தின் இசையை அனிருத் அமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘தளபதி கச்சேரி’ என்ற முதல் பாடல் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், ‘ஜன நாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 27ஆம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ளது.

விஜய்யின் கடைசிப் படம் என்பதால், தமிழ்நாட்டில் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில், இந்த விழா மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் என்ற பிரம்மாண்ட அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. இந்த அரங்கத்தில் சுமார் 85 ஆயிரம் பேர் அமர முடியும்.

இந்த விழா வெறும் ஆடியோ வெளியீடு மட்டுமல்லாமல், ஒரு ‘தளபதி கச்சேரி’ போல நடத்தப்பட உள்ளது. இதில் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் சூப்பர் ஹிட்டான 35 பாடல்கள், அவற்றைப் பாடிய ஒரிஜினல் பாடகர்களால் பாடப்பட உள்ளன. மேலும், ரஜினி, கமல், சூர்யா போன்ற தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரும் இந்த விழாவில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. இதனால், ‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Devi Ramu

Recent Posts

ஆர்சிபி டிஜே செய்த ‘அந்த’ ஒரு தப்பு!… கொதித்தெழுந்த சிஎஸ்கே நிர்வாகம்… பிசிசிஐ-க்கு பறந்த புகார் கடிதம்… மைதானத்தில் நடந்த ‘பகீர்’ சம்பவம்…!!!

ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…

12 minutes ago

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” ஏளனமாக பேசிய ஊர் மக்கள்… தடைகளை உடைத்து இந்திய ராணுவத்தில் இணைந்த இளைஞர்.. “நீ சாதிச்சிட்ட” குவியும் பாராட்டுக்கள்…!!

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…

17 minutes ago

“இந்த பூனைக்குட்டிக்கு உங்க பூனையே தந்தை” நீங்க தான் வளர்க்கணும்… பக்கத்துக்கு வீட்டாரின் வாக்குவாதத்தால் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற பஞ்சாயத்து…!!

பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…

23 minutes ago

சீனாவிடம் இருந்து சாட்டிலைட்டை விலைக்கு வாங்கிய ஈரான்… விண்ணில் இருந்து அமெரிக்கத் தளங்களைத் தூக்கியடித்த ‘மாஸ்டர் பிளான்’… அதிர வைக்கும் உளவுத் தகவல்கள்…!!!

சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…

26 minutes ago

மாறுவேடப் போட்டிக்காக மகன் உடல் முழுவதும் பெயிண்ட் பூசிய தாய்… கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி… உயிருக்கே ஆபத்து என கண்டிக்கும் நெட்டிசன்கள்..!!

அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…

30 minutes ago

பகீர்..! கிரிக்கெட் மேட்ச் முடிந்த சில மணி நேரங்களில்.. மகளைக் கொன்று தாயும் தற்கொலை.. நடந்தது என்ன..? வெளியான பகீர் பின்னணி..!!

பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…

34 minutes ago