தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் தனது கூட்டணியை பலமாக வைத்திருப்பதால் இந்த முறையும் திமுக ஆட்சியை பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார். திமுகவில் மிகப்பெரிய கூட்டணியாக விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளதால் நாளுக்கு நாள் பலம் கூடிக் கொண்டே செல்கிறது. இதனிடையே பீகாரில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவியதை தொடர்ந்து தமிழகத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது.
இதற்காக பல திட்டங்களையும் தீட்டி வருகிறது. பீகார் தேர்தலில் ஏற்பட்ட நிலை தமிழகத்தில் வந்து விடக்கூடாது என்பதற்காக கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. அதன்படி தமிழகத்தில் மாவட்ட தலைவர்களை மாற்ற கார்கே உத்தரவிட்டு உள்ளார். ஏற்கனவே மாவட்ட தலைவர்கள் மாற்றத்திற்கு எதிர்ப்புகள் நிலவிவரும் நிலையில் இது கட்சிக்குள் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…