actor suriya

நடிகர் சூர்யா நடிக்கும் 48வது படம்… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்… அதுவும் இந்த கேரக்டரில் நடிக்கிறாரா? வாய் பிளந்த ரசிகர்கள்!

By Elango on மாசி 12, 2026

Spread the love

நடிகர் சூர்யா நடித்த கருப்பு படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. இது அவரது 45வது படம். இதையடுத்து நடிகர் சூர்யா தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்த விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படம் போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகளில் உள்ளது. இந்த படம் ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து இப்போது மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 47வது படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சூர்யாவின் 48வது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சூர்யாவின் 48வது படம் உருவாகிறது. இந்த படத்தில் சூர்யா கல்லூரி மாணவர் கேரக்டரில் நடிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.