உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவன் கரண், வாரணாசியில் உள்ள தன் உறவினர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு வளர்ப்பு நாய் அவனைக் கடித்தது. உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று டெட்டனஸ் ஊசி போட்டுக் கொண்ட கரண், ரேபீஸ் தடுப்பூசியும் போட முயன்றான். ஆனால், அங்குள்ள மருத்துவ ஊழியர் ஒருவர் “டெட்டனஸ் ஊசியே போதுமானது, ரேபீஸ் வராது” என்று தவறான வழிகாட்டுதலை வழங்கியதால், கரண் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் வீடு திரும்பினான்.
சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு, மார்ச் 13 அன்று கரணுக்கு திடீரென மயக்கம், பேச முடியாமை, நீர் வெறுப்பு (Hydrophobia) மற்றும் எச்சில் வடிதல் போன்ற தீவிர அறிகுறிகள் தோன்றின. மேலும், நாய் போல குரைக்கத் தொடங்கிய அவனைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். வாரணாசி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, பரிசோதித்த மருத்துவர்கள் “ரேபீஸ் நோயின் இறுதி கட்டத்தை அடைந்துவிட்டான், 4 நாட்களில் உயிரிழந்துவிடுவான்” எனக் கூறி, அவனை ஒரு இருட்டறையில் பூட்டி வைக்க அறிவுறுத்தினர்.
கைவிடப்பட்ட நிலையில், உறவினர் ஒருவரின் வழிகாட்டுதலால் முதன்மை சுகாதார நிலையத்தில் பணிபுரியும் சுமன் என்பவரிடம் கரண் அழைத்துச் செல்லப்பட்டான். அங்கு அவனுக்கு தொடர்ச்சியாக ரேபீஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. மொத்தம் 22 நாட்களில் 5 தடுப்பூசிகளும், பின்னாள்களில் எழுந்த அறிகுறிகளுக்காக மேலும் 2 தடுப்பூசிகளும் போடப்பட்ட நிலையில், கரண் அதிசியத்தக்க வகையில் முழுமையாகக் குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்பினான்.
மருத்துவர்களின் கூற்றுப்படி, கடித்த நாய் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாயாக இருந்திருக்கலாம் என்பதால் நோய் வீரியம் குறைவாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. மேலும், “நாய் கடித்தால் மனிதர்கள் குரைப்பார்கள்” என்ற தவறான நம்பிக்கையின் காரணமாக எழுந்த உளவியல் பயத்தால் அச்சிறுவன் நாய் போல் குரைத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. எதுவாகினும், மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்து தற்போது சக சிறுவர்களுடன் ஓடியாடி விளையாடும் கரணின் இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களுக்குப் பெரு மகிழ்ச்சியையும், மருத்துவர்களுக்கு வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல் களத்தில் தவெக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளிடையே நடக்கும் கருத்து மோதல்களும் அரசியல் நகர்வுகளும் பெரும் விவாதப்…
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 3 ரகசிய கோப்புகள் விவகாரம் மற்றும் தவெக உறுப்பினர்களின் பேச்சு குறித்து திமுக…
கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியில், பள்ளிவாசல் அருகே பல ஆண்டுகளாக அமர்ந்து பிச்சை எடுத்து வந்த முதிய பெண்மணி ஒருவர்…
'மர மனித நோய்' என்று பரவலாக அறியப்படும் எபிடெர்மோடிஸ்பிளாசியா வெருசிஃபார்மிஸ் என்பது மனிதர்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய ஒரு மிக அரிதான…
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர்…
சங்கரெட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த சுரேகா என்ற இளம்பெண், தனது காதல் திருமணத்திற்குப் பெற்றோர் சம்மதிக்காத…