உடுமலை அருகேயுள்ள போடிப்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஜெகதீஷ், தைவானில் உயர்கல்வி பயிலும்போது டேட்டிங் செயலி மூலமாக ஜோயிங்யிங் என்ற அந்த நாட்டுப் பெண்ணை சந்தித்தார். நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறிய நிலையில், படிப்பு முடிந்ததும் திருமணம் செய்துகொள்வதாக இளைஞர் உறுதியளித்துள்ளார். இதனை நம்பிய அப்பெண், ஜெகதீஷின் கல்வி மற்றும் தங்கும் செலவுகளை ஏற்றுக்கொண்டு அவருடன் இணைந்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய ஜெகதீஷ், திருமணத்திற்கு பெற்றோரிடம் சம்மதம் கேட்பதாகக் கூறிவிட்டு வந்து, திடீரென காதலியுடனான தகவல் தொடர்பை முழுமையாகத் துண்டித்துவிட்டார்.
காதலன் தன்னை ஏமாற்றுவதை உணர்ந்த தைவான் பெண், இணையம் வழியாக உடுமலை வழக்கறிஞர் ஒருவரைத் தொடர்புகொண்டு சட்ட ஆலோசனை பெற்றார். அதன்படி நேரடியாக இந்தியா வந்த அவர், உடுமலை மகளிர் காவல் நிலையத்தில் தகுந்த ஆதாரங்களுடன் புகார் மனு ஒன்றை அளித்தார். திருமண ஆசை காட்டி ஏமாற்றியது, தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு தற்போது கைவிட்டது மற்றும் தன்னைத் தாக்கியது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், ஜெகதீஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…