“அடப்பாவிங்களா… கண்ணிமைக்கும் நேரத்துல… புல்லட்டை தூக்கிட்டாங்களே… பெட்ரோல் பங்க் அருகே… நள்ளிரவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!”

By Swetha on ஆவணி 14, 2026

Spread the love

நாசிக்கின் மஸ்ரூலில் பகுதி தேவகிருபா அபார்ட்மெண்ட் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் புல்லட்’ மோட்டார் சைக்ளிக் ஒன்று நள்ளிரவில் திருடப்பட்டுள்ளது. திண்டோரி சாலையில் உள்ள ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகிலேயே இச்சம்பவம் நடந்துள்ளதால், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்திருட்டு சம்பவம் குறித்த முழு வீடியோவும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில், மர்ம நபர்கள் சிலர் மிகக் குறைந்த நிமிடங்களிலேயே மிகவும் சாமர்த்தியமாக பூட்டை உடைத்து புல்லட் பைக்கை திருடிச் செல்வது தெளிவாகத் தெரிகிறது

   

https://twitter.com/nextminutenews7/status/2087895067713560880/video/1

   

இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, மஸ்ரூல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருடர்களை தீவிரமாக தேடி வரும் காவல்துறையினர், விரைவில் அவர்களை கைது செய்வோம் என தெரிவித்துள்ளனர்.