இபிஎஸ்-க்கு z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், பாதுகாப்பை கூட்டியுள்ளது ஒன்றிய அரசு. இதன் மூலம் துப்பாக்கி ஏந்திய 10 NSG கமாண்டோக்கள், 55 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். அண்மையில் இபிஎஸ்-க்கு இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் இரு முறை கொலை மிரட்டல் விடுத்தது கவனிக்கத்தக்கது.
