நார்வே நாட்டின் ஸ்வால்பார்ட் தீவில் உள்ள நகரம் லாங்யர்பியன். இங்கு இறப்பது என்பது சட்டவிரோதமானது. உலகிலேயே மிகவும் குளிரான இடத்தில் ஒன்று இந்த நகரம் தான். மைனஸ் 46.3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் போகும். வெப்பமான நாட்களிலும் கூடவே அதிகபட்ச வெப்பம் 3 – 7 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இங்கு அதிகமான குளிர் இருப்பதால் உடல் மக்கிப்போகாது. சதை மற்றும் எலும்புகளும் அதில் இருக்கும். வைரஸ் கூட அப்படியே இருக்கும். இங்கு புதைக்கப்பட்ட உடல்களை எடுத்து ஆய்வு செய்ததில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உள்ள வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் கூட அப்படியே இருந்துள்ளது.
இதன் காரணமாக இந்த நகரின் எல்லைகளுக்குள் உடலை புதைக்க கூடாது என்று சட்டம் கொண்டுவரப்பட்டது. மேலும் நகரில் இருந்த கல்லறைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த ஊரில் உயிரிழக்கும் தருவாயில் இருக்கும் மக்கள் நார்வே நாட்டின் பிரதான நிலப்பகுதிக்கு 2000 கிலோமீட்டர் தூரம் கொண்டு செல்லப்பட்டு, இறந்த பிறகு அங்கு புதைக்கப்படுகிறார்கள். இங்கு பிரசவத்திற்கு சரியான மருத்துவ வசதிகள் கிடையாது. கர்ப்பிணி பெண்கள் குழந்தை பெறுவதில்லை. கர்ப்பிணி பெண்கள் பிரசவ தேதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே நார்வேயின் பிரதான பகுதிக்கு சென்று விடுகிறார்களாம்.
