எகிப்து நாட்டை ஆண்ட மன்னன் துட்டன்காமனுடைய தங்க கல்லறையை கடந்த 1920 ஆம் வருடம் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். இந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தார்கள். அதாவது ஆயிரக்கணக்கான வருடங்களாக பூட்டி கிடக்கும் அந்த கல்லறையை திறந்த போது அதிலிருந்து பூஞ்சை தாக்குதலால் அவர்கள் உயிரிழந்தார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பூஞ்சையிலிருந்து புற்றுநோய் தடுப்பதற்கான மருந்தை அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
இந்த பூஞ்சையில் அஸ்பெரிஜிமைசின்ஸ் எனப்படும் நான்கு மூலக்கூறுகள் பிரித்து எடுத்து ஆராய்ந்ததில் ரத்த புற்றுநோய் மற்றும் எலும்பு மஜ்ஜை புற்றுநோய் ஏற்படுத்தும் லுக்கேமியா புற்று நோய் செல்கள் பெருகாமல் தடுப்பதை கண்டறிந்துள்ளார்கள். முதற்கட்டமாக இந்த மருந்தை விலங்குகள் மீது சோதித்து பார்த்தபோது மனிதர்களுடைய சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்கள். இது எதிர்காலத்தில் புற்று நோய்க்கு சிறந்த மருந்தாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் இதில் பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்பதும் உறுதி செய்துள்ளார்கள்.
