தமிழக முழுவதும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் வேட்பாளராக தவெக கட்சியின் தலைவர் விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் திமுக- பாஜகவுடன் நேரடியாகவோ மறைமுகமவோ கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இதனால் 2026 சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் நடிகை கௌதமி அதிமுக கூட்டணியில் இணைவதற்கு தமிழக வெற்றிக் கழக கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டின் நலனுக்காக மட்டுமல்ல, மக்களின் பாதுகாப்புக்காக திமுக அரசை அகற்ற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால், நாம் எல்லோரும் கை கோர்த்து ஒன்றாக வேலை செய்ய வேண்டும். மேலும், சரியான திட்டமிடலுடன் இபிஎஸ்ஸின் சுற்றுப்பயணம் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
