தமிழ் சின்ன திரையை பொருத்தவரையில் சன் டிவி சீரியல்கள் என்றாலே எப்போதும் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமே இருக்காது. அப்படி விறுவிறுப்பான கதைகளத்துடன் தயார் ஆவதால் தான் டிஆர்பி ரேஸில் எப்போதுமே சன் டிவி சீரியல்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன. தொடர்ந்து முதலிடத்தை தக்க வைப்பதற்காக பல்வேறு புது முயற்சிகளை எடுக்கும் சன் டிவி அண்மையில் மகா சங்கமம் என்ற பெயரில் மூன்று முடிச்சு மற்றும் மருமகளாகிய இரண்டு சீரியல்களை ஒன்றாக எடுத்து அதன் மூலம் டிஆர்பியை அள்ளியது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக சன் டிவி 4 மெகா தொடர்களின் ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் இந்த ஜூலை மாதம் முழுவதுமே சன் டிவி தொடர்களில் திருமண திருவிழா களைகட்ட போகிறது. அதன்படி கலந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மருமகள் சீரியலை நாராயணமூர்த்தி என்பவர் இயக்கி வரும் நிலையில் இந்த சீரியலில் கல்யாண கலாட்டா தொடங்கியுள்ளது. இதில் நடித்து வரும் சத்யா மற்றும் கார்த்திக் இடையேயான கல்யாணம்தான் இந்த மாதம் முழுவதும் ஒளிபரப்பாக உள்ளது.
)
அடுத்ததாக எப்போதும் டிஆர்பி யில் முதலிடத்தில் இருக்கும் சிங்க பெண்ணே சீரியலிலும் திருமண எபிசோடுகள் இந்த மாதம் ஒளிபரப்பாக உள்ளது. ஆனந்தி மற்றும் அன்பு இடையேயான திருமண கொண்டாட்டங்கள் தான் நடைபெற உள்ளது. அதே சமயம் இதில் நிறைய ட்விஸ்ட்களும் காத்திருக்கின்றன.
)
எதிர்நீச்சல் 2 சீரியலை திருசெல்வம் இயக்கி வரும் நிலையில் இந்த சீரியலில் கல்யாண எபிசோட் ஆரம்பமாக உள்ளது. ஆதி குணசேகரன் மற்றும் ஈஸ்வரி ஜோடியின் மகனான தர்ஷனுக்கும் அன்புக்கரசிக்கும் இடையேயான திருமணம்தான் இந்த மாதம் முழுவதும் நடைபெற உள்ளது.

இறுதியாக சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ஆடுகளம் சீரியலில் சத்யா மற்றும் அர்ஜுன் ஜோடிக்கு எப்போது திருமணம் என ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த நிலையில் அந்த திருமண எபிசோடுகள் இந்த மாதம் முழுவதும் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
