மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் ஒவ்வொரு வருடமும் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கல்வி, இலக்கியம், மருத்துவம், விளையாட்டு, சமூகப் பணி மற்றும் தொழில்துறை என்று பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2025 ஆம் ஆண்டு மொத்தமாக 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் ஏழு பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 19 பேருக்கு பத்மபூஷன் விருதும், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலய்யா:
நாட்டின் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷன் விருதுக்கு தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.
ஷோபனா:
90ஸ் புகழ்பெற்ற நடிகை சோபனாவுக்கும் நல்லி குப்புசாமிக்கும் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
செஃப் தாமு:
புகழ்பெற்ற சமையல் கலைஞரான செஃப் தாமு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். தற்போது இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வின்:
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் சமீபத்தில் தன்னுடைய ஓய்வை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அஜித்:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் அஜித் சினிமாவை தாண்டி பைக் மற்றும் கார் ரேஸ் என அனைத்திலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். இப்படி புகழ்பெற்ற கலைஞருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்துள்ளது.
பி.தட்சணாமூர்த்தி
15 வயது முதல் நாடு முழுவதும் 15 ஆயிரம் தவில் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள புதுச்சேரியைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞரான பி.தட்சணாமூர்த்திக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தவிர குருவாயூர் துரை, தினமலர் பத்திரிகையின் இணை நிர்வாக ஆசிரியர் லட்சுமிபதி ராமசுப்பையர், ஸ்ரீனிவாஸ், புரிசை கண்ணப்ப சம்பந்தம், சந்திரமோகன், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, சீனி விஸ்வநாதன் மற்றும் வேலு ஆசான் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவரான…
ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவிற்கு எதிராக கடுமையான போர்க்கால எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.…
பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகங்களுக்கு, அரபு நாடுகளின் சில கிராமப்புறப் பகுதிகளில் "ஹயாம்" என்ற விசித்திரமான நோய் பாதிப்பு…
திருப்பத்தூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் முதன்மை அரசு வழக்கறிஞராக, ஆடு திருடிய வழக்கில் கைதாகி சிறை சென்ற வழக்கறிஞர் ஷேக்…
சென்னையில் உள்ள ஒரு ரயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், சக ஆண் பயணி ஒருவர் தன்னைத் தொடர்ந்து 20…
மெக்ஸிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்தில் உள்ள லாகோஸ் டி மொரினோ பகுதியில், மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் நபர்களை ஒரு…