வங்கிக் கணக்கில் ரூ.2,000… மத்திய பட்ஜெட்டுக்கு முன்னரே ஒரு குட் நியூஸ்… அரசு புதிய அறிவிப்பு.!

By Nanthini on தை 28, 2026

Spread the love

மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பிரதமரின் கிசான்  திட்டத்தின் அடுத்த தவணைத் தொகை எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் நிலவியது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், பிப்ரவரி மாதத்தில் வழக்கம்போல 22-வது தவணையாக ரூ.2,000 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பட்ஜெட் சமயத்தில் விவசாயிகளுக்கு ஒரு முக்கிய நிதியுதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் பலனைத் தடையின்றிப் பெறுவதற்கு, விவசாயிகள் தங்களது e-KYC நடைமுறைகளை உடனடியாக நிறைவு செய்ய வேண்டியது அவசியமாகும். மேலும், தகுதியுள்ள விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் துறை அதிகாரிகளை அணுகி, தங்களுக்குரிய தனித்துவமான அடையாள எண்ணைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆவணங்களைச் சரியாகப் புதுப்பிப்பதன் மூலம் மட்டுமே தவணைத் தொகை எவ்வித சிக்கலுமின்றி விவசாயிகளின் கணக்கிற்கு வந்து சேரும் என்பதை அரசு தெளிவுபடுத்தியுள்ளது.