தமிழகத்தில் பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்காக மாநிலம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகின்றது. முதல் கட்டமாக நடைபெற்று வரும் இந்த முகாம் கடந்த ஜூலை 15ஆம் தேதி தொடங்கியது. இதில் நகரப் பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் வழியாக 46 சேவைகளும் வழங்கப்படுகின்றன. வார்டு வாரியாக நடைபெறும் இந்த முகாம்கள் குறித்து அலுவலர்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது.
அதனைப் போலவே திமுக உள்ளாட்சி பிரதிநிதிகளும் தங்களுடைய பகுதி முகாம்கள் குறித்து மக்களுக்கு தெரிவித்து வருகிறார்கள். அதே சமயம் https://ungaludanstalin.tn.gov.in/ என்ற இணையதளத்தில் நாளை முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து ஒரு நாள் முன்னதாகவே அறிவிப்பு வெளியிடப்பட்டு வந்தது. தற்போது அந்த இணையதளத்தில் வரும் நாட்களில் எங்கு முகாம் நடக்கிறது என தேதி வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த இணையதள பக்கத்திற்குச் சென்ற உங்கள் ஊரில் முகாம் எங்கு நடைபெறுகிறது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
