ஆண்மை குறைபாடு கொண்ட கணவர்.. திடீரென கர்ப்பமான மனைவி… அடுத்து நடந்த பயங்கர சம்பவம்…!

By Nanthini on ஆடி 30, 2025

Spread the love

கர்நாடக மாநிலத்தில் தியாகடகட்டாவை சேர்ந்த லட்சுமி என்பவருக்கும் சன்னகிரி தாலுகா அன்னபுரா கிராமத்தை சேர்ந்த நிங்கப்பாவுக்கும் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு இதுவரை குழந்தை இல்லாத நிலையில் இருவரும் மருத்துவமனைக்குச் சென்று பல மருத்துவ பரிசோதனைகள் செய்தனர். இதில் கணவருக்கு குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது. நிங்கப்பா பாக்கு தோட்டத்தில் வேலை செய்து வந்த நிலையில் அவருடன் திப்பேஸ் நாயக், சந்தோஷ் ஆகியோரும் வேலை செய்து வந்துள்ளனர். இதனிடையே திப்பேஷ் நாயக்குடன் லட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறிய நிலையில் இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதனால் லட்சுமி கர்ப்பமான நிலையில் தனக்கு குழந்தை பெறுவதில் குறைபாடு இருக்கும் நிலையில் எப்படி அவர் கர்ப்பமாகி இருக்க முடியும் என்று நிங்கப்பா சந்தேகம் அடைந்துள்ளார். இதனால் லட்சுமி வயிற்றில் உருவான கருவை அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கலைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி கணவரை தீர்த்து கட்ட திட்டமிட்ட நிலையில் கள்ளக்காதலனிடம் இது குறித்து கூறியுள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திப்பேஷ் நாயக் விருந்து வைப்பதாக கூறிய லட்சுமி உடன் அவரது கணவரையும் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு லட்சுமியின் கணவருக்கு அதிகமாக மது கொடுத்து மயங்க வைத்துள்ளார்.

   

பிறகு லட்சுமி தனது கள்ளக்காதலருடன் சேர்ந்து கல்லால் தாக்கி கொடூரமாக கொன்று கால்வாயில் வீசி உள்ளனர். பிறகு இருவரும் கால்வாயில் குளிக்கும் போது கணவர் அடித்துச் செல்லப்பட்டதாக லட்சுமி போலீசில் புகார் அளித்தார். இருந்தாலும் போலீசால் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து தனது கள்ளக்காதலனுடன் கேரளாவிற்கு லட்சுமி சென்று விட்டார். இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் உடனே போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் வெளிவந்தது. அதாவது திப்பேஸ் என்பவருக்கும் லட்சுமிக்கும் கள்ளக்காதல் இருந்ததும் பிறகு இருவரும் சேர்ந்து லட்சுமியின் கணவரை தீர்த்து கட்டியதும் போலீசாருக்கு தெரிய வந்த நிலையில் கேரளாலிருந்த இருவரையும் தற்போது போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.