உல்லாசம் பட நடிகை மகேஸ்வரியா இது..? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..!

By Mahalakshmi on மே 27, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் மக்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்திருக்கும் நடிகை மகேஸ்வரி . தற்போது எப்படி இருக்கிறார் என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகிறோம். தமிழ் சினிமாவில் அஜித், விக்ரம் போன்ற மாஸ் ஹீரோகளுடன் இணைந்து நடித்த திரைப்படம் தான் உல்லாசம்.

   

1997 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர்தான் மகேஸ்வரி. அது மட்டும் இல்லாமல் இவரது குடும்பமே ஒரு சினிமா குடும்பம் தான்.  நடிகை ஸ்ரீதேவியின் சித்தி மகள் தான் நடிகை மகேஸ்வரி. முதன்முதலாக 1994 ஆம் ஆண்டு கிரண்டிவீர். என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானார்.

   

அதன் பிறகு தமிழில் கருத்தம்மா என்ற படத்தில் நடித்திருந்தார். படத்தின் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார். அதன் பிறகு நடிகை மகேஸ்வரிக்கு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்தது. நடிகை மகேஸ்வரி தமிழ், தெலுங்கு, கன்னடம் என பழமொழிகளின் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

 

தமிழில் பாஞ்சாலங்குறிச்சி, நாம் இருவர் நமக்கு இருவர், உல்லாசம், நேசம், ரத்னா பல ஹிட் திரைப்படங்களின் நடித்திருக்கின்றார். தொடர்ந்து சினிமாவில் குறைந்த அளவு திரைப்படத்தில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர். எல்லா நடிகைகளும் போல இவருக்கும் மார்க்கெட் குறைய சின்னத்திரைக்கு வந்த சீரியலில் நடிக்க தொடங்கினார்.

அப்படி நடிகை மகேஸ்வரி நடித்த அதே கண்கள் சீரியல் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. சிறுவயதிலிருந்தே பேஷன் டிசைனிங் அதிக ஆர்வம் கொண்ட இவர் சினிமா துறையில் ஒரு பக்கம் நடித்து வந்தாலும் ஆடைகளுக்கு டிசைன் செய்யும் வேலையை பார்த்து வந்தார். நடிகை மகேஸ்வரி சினிமா துறையில் வாய்ப்பு குறைந்த உடன் முழு நேரமும் பேஷன் டிசைனில் கவனம் செலுத்தி வருகின்றார்.

நடிகை மகேஸ்வரி ஹைதராபாத்தில் சேர்ந்த தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பேஷன் டிசைனர் வேலைக்கு ஸ்ரீதேவியும் உதவியாக இருந்ததாக பலமுறை பேட்டியில் தெரிவித்திருப்பார். நடிகை மகேஸ்வரி தற்போது ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூருடன் முப்பத்தம்மன் திருக்கோவிலுக்கு சென்று இருக்கின்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஜான்விகபூர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.