பிரபல நடிகையான ஸ்ரீதேவி கடந்த 1969-ஆம் ஆண்டு ரிலீசான துணைவன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக முருகன் வீட்டில் அறிமுகமானார். பின்னர் கே. பாலச்சந்தர் இயக்கிய மூன்று முடிச்சு திரைப்படத்தில் ஸ்ரீதேவி கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் ஸ்ரீதேவி நடித்தார்.
தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகள் ஸ்ரீதேவிக்கு வழங்கப்பட்டது. இதுவரை ஸ்ரீதேவி சுமார் 300 படங்களில் நடித்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு ஸ்ரீதேவிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. பெரும்பாலும் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஸ்ரீதேவி ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் கமல்ஹாசனுடன் ஸ்ரீதேவி இணைந்து நடித்த படங்கள் பற்றி பார்ப்போம்.
முதலாவதாக கடந்த 1976-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன மூன்று முடிச்சு படத்தில் கமல்ஹாசனும் ஸ்ரீதேவியும் இணைந்து நடித்துள்ளனர். அடுத்ததாக கடந்த 1977-ஆம் ஆண்டு ரிலீசான உன்னை சுற்றும் உலகம், கடந்த 1977-ஆம் ஆண்டு ரிலீசான 16 வயதினிலே, கடந்த 1978-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன சிகப்பு ரோஜாக்கள், கடந்த 1978-ஆம் ஆண்டு ரிலீசான மனிதரில் இத்தனை நிறங்களா, 1979-ஆம் ஆண்டு ரிலீசான சிகப்புக்கல் மூக்குத்தி ஆகிய படங்களில் சேர்ந்து நடித்தனர்.
இதனையடுத்து கடந்த 1979-ஆம் ஆண்டு ரிலீசான தாயில்லாமல் நானில்லை, கடந்த 1979-ஆம் ஆண்டு ரிலீசான கல்யாண ராமன், கடந்த 1979-ஆம் ஆண்டு ரிலீசான நீள மலர்கள், கடந்த 1980-ஆம் ஆண்டு ரிலீசான குரு, கடந்த 1980-ஆம் ஆண்டு ரிலீசான வறுமையின் நிறம் சிவப்பு, கடந்த 1981-ஆம் ஆண்டு ரிலீசான மீண்டும் கோகிலா, கடந்த 1981-ஆம் ஆண்டு ரிலீசான சங்கர்லால், கடந்த 1982-ஆம் ஆண்டு ரிலீசான வாழ்வே மாயம், கடந்த 1982-ஆம் ஆண்டு ரிலீசான மூன்றாம் பிறை ஆகிய படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர்.