காமெடி, மெமிக்ரி என தனது திறமையால் பிரபலமான நடிகர் ரோபோ சங்கர் சமீபத்தில் அவரது புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் மிகவும் மெலிந்து காணப்பட்டார். அதனை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர் உடல்நல குறைவால் இப்படி மெலிந்திருக்க கூடும் என்று ரசிகர்கள் அனைவரும் கவலைபட்டனர்.
அதற்கு அவரது குடும்பத்தினர் அவர் நலமாக இருக்கிறார். படத்திற்காக உடல் எடை குறைத்தார் என்று பதிலளித்திருந்தனர். இருப்பினும் சமீபத்தில் அவரது மனைவி வெளியிட்ட போட்டோ மற்றும் வீடியோகளில் கலை இழந்து காணப்பட்டதால் அவர் உடல்நலம் சரில்லாமல் இருப்பது போல் சந்தேகத்தையே எழுப்பியது.
இந்நிலையில், அவர் வெளிநாட்டில் ஷூட்டிங் சென்றிருந்த பொது அவருக்கு வயிற்று போக்கு ஏற்பட்டது. அப்போது அவர் மருத்துவமனை சென்று பரிசோதித்ததில் தான் அவருக்கு ஆறு மாத காலமாக மஞ்சள் காமாலை இருந்ததாக தெரியவந்தது. இது தெரிவதற்கு முன்பே அவர் அசைவம் உண்பது மற்றும் மது அருந்துவது போன்றவற்றை கைவிட்டுள்ளார். இதுவே அவர் தற்பொழுது விரைவில் குணமடைய உதவியுள்ளது.
தற்பொழுது சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரோபோ ஷங்கர் மெல்ல மெல்லமாக குணமடைந்து வருகிறார். இதைத்தொடர்ந்து அவரை பல திரைபிரபலங்களும் நலம் விசாரித்து வருகின்றனர். அந்தவகையில் உலகநாயகன் கமலஹாசன் அமெரிக்காவில் இருந்தபடி போன் பண்ணி விசாரித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…
கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…
தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…
தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…