மக்களே… இனி இ-சேவை மையங்களுக்கு செல்ல வேண்டாம்… எல்லாமே APP தான்… சூப்பர் குட் நியூஸ்…!

By Nanthini on புரட்டாதி 15, 2025

Spread the love

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் உள்ள அனைத்து விவரங்களையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆதார் கார்டில் சில முக்கிய மாற்றங்களை செய்வதற்கு இ சேவை மையங்களை மக்கள் அணுகுகின்றனர். அங்கு ஆதார் கார்டில் சில முக்கிய மாற்றங்களை எளிதில் செய்து விடுகிறார்கள்.

இப்படியான நிலையில் டிசம்பர் மாதத்தில் இருந்து புதிய ஆதார் செயலி பயன்பாட்டுக்கு வர உள்ளதாக UIDAI தலைமைச் செயல் அதிகாரி புவனேஷ் குமார் அறிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் இனி இ சேவை மையங்களுக்கே செல்ல தேவையில்லை. தற்போது முகவரி மாற்றுவது போலவே செல்போன் நம்பர் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்டவற்றை இந்த செயலி (face authentication) மூலம் மாற்ற முடியும். இதனால் பயனர்களின் விவரம் தவறாக பயன்படுத்தப்படுவதும் தடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.