டிஜிட்டல் ஆப் மீட்டிங்…. ‘தவெக பிம்பத்தை அடியோடு உடைங்க’…. உதயநிதி போட்ட உத்தரவு…. பட்ஜெட் கூட்டத்தொடரில் பேரவை ஆட்டம் காணப்போகுது..!

By Nanthini on ஆவணி 1, 2026

Spread the love

சட்டமன்றத்தில் ‘கட்சி நிதி’ விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே ஏற்பட்ட காரசார விவாதம், தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் ஆளும் கட்சி மீது முதல்வர் விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் வெளிநடப்பு செய்த நிலையில், “நாம் பேசிய சிறிது நேரத்திற்கெல்லாம் கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டுவிட்டார்கள்” என விஜய் கிண்டலாகக் கூறியது திமுக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. மேலும், லஞ்ச ஒழிப்புத்துறையை வைத்து திமுகவை முடக்க அரசு முயல்வதாக எழும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், சட்டமன்றத்திலேயே இதற்கு உரிய பதிலடி கொடுக்க உதயநிதி திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரை எதிர்கொள்ள திமுக தரப்பில் தீவிர வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் காணொளி வாயிலாக திமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் உரையாடிய உதயநிதி, வரவிருக்கும் கூட்டத்தொடரில் தவெகவின் அரசியல் பிம்பத்தை முற்றிலுமாக உடைத்தெறிய வேண்டும் என்று காரசாரமாக அறிவுறுத்தியுள்ளார். தொகுதிப் பிரச்சினைகள், ஆளும் தவெக நிர்வாகிகளின் செயல்பாடுகள் மற்றும் மாநில அளவிலான மக்கள் பிரச்சினைகளை மையமாக வைத்து சட்டமன்றத்தில் வலுவான கேள்விகளை எழுப்புமாறு எல்.எல்.ஏ-க்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இதனால், விரைவில் கூடவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடர் இரு துருவ அரசியல் மோதல்களுடன் மிகவும் சூடாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.