விஜய்க்கு விழுந்தப் பேரடி… “வரவே வேண்டாம்”…. டி.கே.சிவக்குமார் சொன்ன ‘திடீர்’ பதில்… கொதித்தெழுந்த ஸ்டாலின்…..!

By Nanthini on ஆவணி 1, 2026

Spread the love

கர்நாடக அரசு காவிரி நீரைத் திறந்துவிட முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்ட சூழலில், அம்மாநிலத் துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரைச் சந்திக்கத் தமிழக முதல்வர் விஜய் மேற்கொண்ட முயற்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தமிழக அரசின் தரப்பிலிருந்து அமைக்கப்பட்ட இந்தச் சந்திப்பு முயற்சியை, “இப்போதைக்கு மீட்டிங் வேண்டாம், அப்புறம் பார்ப்போம்” எனக் கூறி கர்நாடகா நிராகரித்துள்ளது. தமிழகத்தின் உரிமை சார்ந்த காவிரிப் பிரச்சினையைச் சட்டப் போராட்டத்தின் மூலம் அணுகாமல், தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்த முயன்றது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்துத் தனது எக்ஸ் தளத்தில் காரசாரமாகப் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்பதாகச் சாடியுள்ளார். கர்நாடக அரசுடன் மேகதாது விவகாரத்திலோ அல்லது காவிரி நீரப் பகிர்விலோ பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது என்றும், சட்டரீதியான போராட்டமே சரியான வழி என்றும் கடந்தகால படிப்பினைகளை மேற்கோள் காட்டி அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், “தான் கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு கொண்டுவந்து விடலாம் எனத் தமிழக முதல்வர் நினைத்தாரோ என்னவோ…” என்று விமர்சித்ததோடு, CWMA உத்தரவிட்டும் கூட நமது முதல்வரை வர வேண்டாம் எனக் கர்நாடகா கேட்டைச் சாத்திவிட்டதை நினைவூட்டியுள்ளார்.

   

இறுதியாக, கர்நாடகா தன் மாநிலத்தில் ஆகஸ்ட் 2 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டித் தங்கள் ஒற்றுமையை நிரூபித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய ஸ்டாலின், தமிழகத்தில் இதுபோன்ற முக்கியமான உயிர்ப் பிரச்சினைகளில் அனைத்துத் தரப்பு ஆலோசனைகளையும் முதல்வர் பெற வேண்டும் எனக் வலியுறுத்தியுள்ளார். “கர்நாடகத்தைப் போலத் தமிழகத்திலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? உங்களால் முடியுமா, முடியாதா?” என்றக் கேள்வியை முன்வைத்து, காவிரி உரிமை மீட்பில் மாநிலத்தின் ஒருங்கிணைந்த குரலை வெளிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தனது பதிவின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.