தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகனான உதயநிதி ஆரம்பத்தில் சினிமாவின் மீதுதான் ஆர்வம் காட்டி வந்தார். சினிமாவில் நடித்த காலங்களில் அவர் எந்த காலத்திலும் கட்சியில் சேர மாட்டேன் என்றெல்லாம் கூறி வந்தார். ஆனால் தற்போது கட்சியிலும் முக்கிய பணியில் இருந்து வரும் உதயநிதி திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய பிறகு, எடுத்த உடனே ஆக்சன் திரைப்படங்களில் நடிப்பது மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று கொடுக்காது. மக்கள் ஒரு நபரை எடுத்த உடனே ஆக்ஷன் ஹீரோவாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை தெரிந்து வைத்திருந்தார்.
அதனால் அவர் பெரும்பாலும் காமெடி திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். அதன்படி அவர் நடித்த திரைப்படம் தான் ஒரு கல் ஒரு கண்ணாடி. இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சந்தானமும் உதயநிதியும் சேர்ந்து செய்யும் காமெடிகள் ரசிகர்களை ரசிக்க வைத்தன. இந்த நிலையில் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் எடுக்கப்பட்டபோது நடந்த சுவாரசிய அனுபவங்களை உதயநிதி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அதில், ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தை முழுவதுமாக எடுத்த எடிட் செய்து விட்டு பார்த்தபோது 5 மணி நேரத்திற்கு அதிகமாக இருந்தது. இவ்வளவு நேரம் படத்தை யாரும் பார்க்க மாட்டார்கள் என்பதால் படத்தை வெகுவாக குறைத்தோம். படத்தில் ஒரு சண்டைக் காட்சிகள் கூட இல்லை மக்கள் இவ்வளவு நேரம் உட்கார்ந்து படம் பார்க்க மாட்டாங்க நிறைய காட்சிகளை எடுத்து விடுங்கள் என்று இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூறினார்.
இந்த படத்தில் ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம் சும்மா ஒரு காட்சிக்கு மட்டும் வருவது போல இருக்கும். ஆனால் உண்மையில் 25 நாள் அந்த படத்திற்காக ஆண்ட்ரியா நடித்தார். ஆண்ட்ரியாவுக்கும் சந்தானத்துக்கும் தனியாக காதல் காட்சிகள் படத்திலிருந்தன. ஆனால் படத்தில் நிறைய காட்சிகளை எடுக்க வேண்டி இருந்ததால் அந்த காட்சிகளை எல்லாம் நீக்கி விட்டோம் என்று உதயநிதி கூறியுள்ளார்.